Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

தஞ்சை: கொரோனா மையத்தில் பாடல் பாடி உற்சாகப்படுத்தும் ஆர்கெஸ்ட்ரா கலைஞர்

கொரோனா சிகிச்சை மையத்திற்கு வாரம் ஒருமுறை சென்று ஆர்கெஸ்ட்ரா கலைஞர் ஒருவர் பாடல்களை பாடி உற்சாகப்படுத்தி வருவதை பலரும் பாராட்டி வருகின்றனர்.

தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி சாலையில் உள்ள பாலாஜி நகரை சேர்ந்தவர் பிராங்க்ளின் (46). ஜீவன் சுருதி என்ற பெயரில் ஆர்கெஸ்ட்ரா குழு ஒன்றை நடத்தி வரும் இவர், தஞ்சாவூர் வசந்தம் லைன்ஸ் கிளப்பில் உறுப்பினராகவும் உள்ளார். நிகழ்ச்சிகள் இல்லாத நாட்களில் பல்வேறு சமூக சேவைகளையும் செய்து வருகிறார்.

image

இந்நிலையில், வல்லத்தில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் கடந்த 1-ஆம் தேதி, மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் ஒத்துழைப்போடு மாலை நேரத்தில் இசை நிகழ்ச்சியை நடத்தினர். அந்த நிகழ்ச்சி கொரோனா சிகிச்சை பெறுவர்களுக்கு உற்சாகத்தை அளித்ததாக தெரிவித்தனர். இதையடுத்து மாவட்ட ஆட்சியர், வாரம் ஒருமுறை நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார். அதன்படி மீண்டும் இரவு நேரங்களில் நிகழ்ச்சியை நடத்தினர்.

கொரோனா சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகள் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இது போன்ற இசை நிகழ்ச்சி அவர்களின் மனதிற்கு ஆறுதலாக இருக்கும் என நம்பலாம்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்