Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

மத்திய அமைச்சர் எழுதிய கடிதம்... சர்ச்சைக்குரிய கருத்திற்கு பாபா ராம்தேவ் வருத்தம்

அலோபதி மருந்துகள் குறித்த தனது சர்ச்சைக்குரிய கருத்துகளை பாபா ராம்தேவ் திரும்பப் பெற்றிருக்கிறார். மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன், ராம் தேவின் அலோபதி மருந்துகள் குறித்த கருத்துகளை வாபஸ் பெறும்படி வேண்டுகோள் விடுத்திருந்தார்.

ஹர்ஷ்வர்தனின் கடிதத்தில், ராம்தேவின் கருத்துகள் துரதிர்ஷ்டவசமானது மற்றும் சுகாதார ஊழியர்களின் மன உறுதியை உடைக்கக்கூடியது. இது கோவிட் -19 க்கு எதிரான எங்கள் போராட்டத்தை பலவீனப்படுத்தக்கூடும் எனவும் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து, பாபா ராம்தேவ் மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தனுக்கு எழுதிய கடிதத்தில், அலோபதி குறித்த தனது முந்தைய அறிக்கையிலிருந்து பின்வாங்குவதாகவும், தான் ஒரு வாட்ஸ்அப் செய்தியின் உரையை மட்டுமே மேற்கோள் காட்டியதாகவும் தெரிவித்திருக்கிறார். மேலும் தனது  கருத்துகளால் யாருடைய உணர்வுகளேனும் காயமடைந்தால் மிகவும் வருந்துவதாகவும், இந்த கருத்தை திரும்பப்பெற விரும்புகிறேன் என்றும் ராம்தேவ் கூறினார்.

image

முன்னதாக சமூக ஊடகங்களில் பரவிய பாபா ராம்தேவின் வீடியோவில், அலோபதி ஒரு "முட்டாள் விஞ்ஞானம்" என்றும், இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையம் ஒப்புதல் அளித்த ரெம்டெசிவிர், ஃபேவிபுளூ மற்றும் பிற மருந்துகள் கொரோனா சிகிச்சையில் தோல்வியுற்றதாகவும், அலோபதி மருந்துகளை எடுத்துக் கொண்டு லட்சக்கணக்கான நோயாளிகள் இறந்துவிட்டனர் என்றும் கூறினார். இது தொடர்பாக ராம்தேவ் மீது நடவடிக்கை எடுக்க இந்திய மருத்துவ சங்கம் வலியுறுத்தி நோட்டீஸ் அனுப்பியது.

இதுதொடர்பாக ஹர்ஷ்வர்தன் எழுதிய கடிதத்தில் " அலோபதி மருத்துவர்கள் கொரோனா பாதித்திருந்த கோடிக்கணக்கான உயிர்களை காப்பாற்றிய சூழலில், லட்சக்கணக்கானோரின் மரணத்திற்கு அலோபதி தான் காரணம் என்ற உங்கள் கருத்துகள் மிகவும் துரதிர்ஷ்டவசமானது. கூட்டு முயற்சிகளால் மட்டுமே கொரோனா போரை வெல்ல முடியும் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. கோவிட்டுக்கு எதிரான போராட்டத்தில் எண்ணற்ற சுகாதார ஊழியர்கள் தங்கள் உயிர்களை இழந்தார்கள் என்பதையும் நீங்கள் அறிவீர்கள். பாபா ராம்தேவ், நீங்கள் ஒரு பொது நபராக இருக்கிறீர்கள், நேரம் மற்றும் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு எந்தவொரு பிரச்சினையிலும் நீங்கள் கருத்துகளை தெரிவிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்