Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியை எதிர்நோக்கி உள்ளேன்: பி.வி.சிந்து தகவல்

கரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக இந்தியா, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய பகுதிகளில் நடைபெற உள்ள பாட்மிண்டன் தொடர்களை உலக பாட்மிண்டன் கூட்டமைப்பு ரத்து செய்தது. இந்த 3 தொடர்களுமே டோக்கியோவில் வரும் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவதற்கான கடைசி கட்ட தொடர்களாக அமைந்திருந்துன. மேலும் இந்தத் தொடர்கள் ஒலிம்பிக் போட்டிக்கு சிறந்த பயிற்சியாக இருக்கும் எனவும் கருதப்பட்டது.

இதுகுறித்து, இந்திய வீராங்கனை பி.வி.சிந்து கூறும்போது, ‘‘கரோனா பெருந்தொற்றால் உலகமே முடங்கி யிருப்பது வருத்தமளிக்கிறது. ஆனால் நாங்கள் விளையாட்டு வீரர்கள் என்பதற்கு முன்னர் நாங்கள் மனிதர்கள். அந்த வகையில் வாழ்க்கைதான் முதலில் வருகிறது. இப்போதைக்கு, தொடர்கள் ரத்து செய்யப்படுகின்றன, விளையாட்டு வீரர்கள் சோகமாக இருப்பதை நான் அறிவேன், ஆனால் இது மக்களுக்கு நல்லது என்று நான் நினைக்கிறேன். கடந்த மார்ச் மாதம் சுவிஸ் ஓபனில் இறுதிச் சுற்றுவரை முன்னேறியிருந்தேன். இந்த ஆண்டில் இதுவரை அதுதான் சிறந்த தொடராக அமைந்தது. ஒரு வீராங்கனையாக முன்னேற்றம் கண்டுள்ளேன். ஒலிம்பிக்கை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளேன்’’ என்றார்.- பிடிஐ


கருத்துரையிடுக

0 கருத்துகள்