Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

“காவிரி-மேகேதாட்டு பகுதியில் அணை கட்டும் கர்நாடகா”- உடனடியாக தடுக்க தினகரன் வலியுறுத்தல்

காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டு பகுதியில் புதிய அணைக்கான கட்டுமானப் பணிகளை தொடங்கியுள்ள கர்நாடகாவின் செயலை,  தமிழக அரசு உடனடியாக தலையிட்டு தடுத்து நிறுத்த வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்திருக்கிறார்.

<blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">மேகேதாட்டு பகுதியில் காவிரியின் குறுக்கே புதிய அணைக்கான கட்டுமானப் பணிகளை கர்நாடக அரசு தொடங்கியிருப்பதாக வரும் செய்திகள் பெரும் அதிர்ச்சி அளிக்கின்றன.மத்திய அரசின் அனுமதி பெறாமல் மேற்கொள்ளப்பட்டிருக்கும் இப்பணிகளை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.1/4</p>&mdash; TTV Dhinakaran (@TTVDhinakaran) <a href="https://twitter.com/TTVDhinakaran/status/1397182174298837001?ref_src=twsrc%5Etfw">May 25, 2021</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

இது தொடர்பாக டிடிவி.தினகரன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “மேகேதாட்டு பகுதியில் காவிரியின் குறுக்கே புதிய அணைக்கான கட்டுமானப் பணிகளை கர்நாடக அரசு தொடங்கியிருப்பதாக வரும் செய்திகள் பெரும் அதிர்ச்சி அளிக்கின்றன.மத்திய அரசின் அனுமதி பெறாமல் மேற்கொள்ளப்பட்டிருக்கும் இப்பணிகளை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.

மேகேதாட்டுவில் கர்நாடகா அணை கட்டிவிட்டால் காவிரியில் துளி தண்ணீர் கூட தமிழகத்திற்கு வராமல் போய்விடும். காவிரி டெல்டா பகுதி மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் முக்கால்வாசி பகுதிகள் குடிநீருக்காக காவிரி நீரை தான் நம்பி இருக்கின்றன. ஏற்கனவே தி.மு.க ஆட்சிக் காலங்களில் தான் காவிரி உள்ளிட்ட நதிநீர் பிரச்னைகளில் தமிழகம் தன்னுடைய உரிமையை கோட்டைவிட்டு நின்றது. இப்போதும் அப்படி நடந்து விடக்கூடாது. எனவே, தமிழகத்தின் ஆட்சி பொறுப்பு மட்டுமல்லாமல், அதிக நாடாளுமன்ற உறுப்பினர்களையும் வைத்துள்ள தி.மு.க உடனடியாக செயல்பட்டு, மேகேதாட்டு அணை கட்டுமானப் பணிகளைத் தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்துகிறேன்” என தெரிவித்திருக்கிறார்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்