Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

அதி தீவிர சூறாவளி புயலாக இன்று கரையைக் கடக்கிறது யாஸ் புயல்!

‘யாஸ்’  அதிதீவிரப் புயலமாக மாறி, ஒடிஸா-மேற்கு வங்கம் கடலோரப் பகுதியில் தாம்ரா துறைமுகம் அருகே இன்று நண்பகலில் கரையைக் கடக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த ‘யாஸ்’ புயல் மேலும் வலுவடைந்து திங்கள்கிழமை நள்ளிரவு தீவிரப் புயலாக மாறியது. இந்த நிலையில் ‘யாஸ்’ புயலானது வடக்கு மற்றும் வடமேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது.  இந்த புயல் ஒடிசாவின் வடக்கு கடலோர பகுதியில் தம்ரா துறைமுகம் அருகே இன்று காலை தீவிரமடையும் என்று எதிா்பார்க்கப்படுகிறது. இதன்பின்னர் ஒடிசா-மேற்கு வங்காள கடலோர பகுதியில் பாரதீப் மற்றும் சாகர் தீவுக்கு இடையே  தம்ரா துறைமுகத்தின் வடக்கு மற்றும் பாலசோரின் தெற்கு பகுதியருகே இன்று நண்பகல் அதி தீவிர சூறாவளி புயலாக கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

image

புயல் தாக்கத்தால் மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசாவின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.  இதனையடுத்து, புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடர்புடைய மாநிலங்கள் எடுத்து வருகின்றன. பல நகரங்களில் இருந்து செல்லும் ரயில்களின் சேவையை வரும் 29-ம் தேதி வரை கிழக்கு ரயில்வே ரத்து செய்துள்ளது.  இதேபோன்று, ஒடிசாவில் கடலோர பகுதியில் வசித்து வரும் மக்கள் ஜகத்சிங்பூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்