Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

என்ன ஆனது இந்தியாவின் 'மெகா' கொரோனா தடுப்பூசி திட்டம்? - ஒரு பார்வை

இந்தியாவில் வரும் டிசம்பருக்குள் 200 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டால்தான் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் அளவிற்கு கூட்டுநோய் எதிர்ப்பு திறன் உருவாகும் என கணிக்கப்பட்டிருந்தது. ஆனால், அப்படி நடக்குமா என்ற ஐயம் எழும் அளவிற்கு இந்தியாவில் தடுப்பூசி செலுத்தும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

கொரோனாவை கட்டுப்படுத்தும் ஒரே பேராயுதம் தடுப்பூசி மட்டுமே என உலக சுகாதார நிறுவனம் தொடங்கி உள்ளூர் ஆய்வு அமைப்புகள் வரை தொடர்ந்து பேசி வருகின்றன.

இஸ்ரேல், பிரிட்டன், அமெரிக்கா என உலக நாடுகள் பலவும் வெற்றிகரமாக தங்களது மக்களுக்கு தடுப்பூசி செலுத்தி கொரோனாவிலிருந்து மீண்டு வருகின்றன. ஆனால் இந்தியாவிலோ நிலைமை தலைகீழாக உள்ளது. உலகிலேயே தினசரி பாதிப்பு அதிகம் கொண்ட நாடாக இந்தியா மாறி வரும் சூழலில், இங்கு தடுப்பூசி செலுத்தும் திட்டமும் ஆமை வேகத்திலேயே நடைபெறுவதாக கூறுகிறார்கள்.

image

ஏப்ரல் மாதத்தில் தினசரி 23,80,000 தடுப்பூசிகள் இந்தியாவில் செலுத்தப்பட்டு வந்த நிலையில், இந்த மாதமோ அந்த எண்ணிக்கை 17,80,000 ஆக குறைந்துள்ளது.

ஒரு நாளைக்கு 90 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தினால் மட்டுமே டிசம்பர் இறுதிக்குள் நாட்டில் 80 சதவீத மக்களுக்கு கூட்டு நோய் எதிர்ப்பு திறன் உருவாகி கொரோனாவின் அடுத்தடுத்த அலைகளை கட்டுப்படுத்த முடியும். ஆனால், ஒருநாளைக்கு 18 லட்சம் தடுப்பூசிகள் கூட செலுத்தப்படாத சூழலில் கொரோனாவின் அடுத்தடுத்த அலைகளை இந்தியா எப்படி சமாளிக்க போகிறதோ என்ற கேள்வி எழுகிறது.

உடனடியாக தடுப்பூசி உற்பத்தியை அதிகரித்து, போர்க்கால அடிப்படையில் அவை மக்களுக்கு கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்தால் மட்டுமே கொரோனாவின் கோரப் பிடியிலிருந்து இந்தியா மீள முடியும் என்கிறார்கள் மருத்துவ வல்லுநர்கள்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்