மாநிலங்களுக்கு பாரபட்சமின்றி தேவைக்கேற்ப ரெம்டெசிவிர் மருந்தை வழங்குவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் அளித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி, சிகிச்சை மருந்துகள் மற்றும் படுக்கைகள் நிலவரம் குறித்து உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்து வருகிறது.
இந்த வழக்கு விசாரணயின்போது, தமிழகத்துக்கு 1,35,000 ரெம்டெசிவிர் மருந்து வழங்கப்பட்டுள்ளதாகவும், புதுச்சேரிக்கு 5100 மருந்துகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு உயர் நீதிமன்றத்தில் தகவல் அளித்துள்ளது. மேலும் அந்தந்த மாநிலங்களின் தேவைக்கேற்ப மருந்துகள் வழங்கப்படுவதாகவும், அதில் பாரபட்சம் பார்க்கப்படுவதில்லை என்றும் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டுள்ளதால் தலைமை அரசு வழக்கறிஞர் மாற்றப்படவும் வாய்ப்பிருப்பதாகவும், எனவே அரசின் முழுமையான விளக்கத்தைப் பெற வழக்கு நாளை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும், சுகாதாரத்துறை செயலாளர் மற்றும் மருத்துவ பணிகள் கழகத்தின் இயக்குநர் ஆகியோர் கூடுமானவரை நாளை நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. அல்லது அவர்களிடமிருந்து விளக்கம் பெற்று தற்போதைய அரசு வழக்கறிஞர்கள் தெரிவிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்