Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

புதிய கல்விக் கொள்கை கூட்டம்: தமிழகம் புறக்கணிப்பு

புதிய கல்விக் கொள்கை தொடர்பாக மத்திய கல்வி அமைச்சர் தலைமையில் நடைபெறும் ஆலோசனையை தமிழக அரசு புறக்கணித்தது.

அனைத்து மாநில கல்வித்துறை செயலாளர்களுடன் மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் புதிய கல்விக்கொள்கை தொடர்பான ஆலோசனைக்கு அழைப்பு விடுத்திருந்தார். இதில் பங்கேற்க தமிழக பள்ளிக்கல்வித்துறை செயலாளர் தீரஜ்குமார், பள்ளிக் கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் ஐஏஎஸ் ஆகியோர் தலைமைச் செயலகத்திற்கு வருகை புரிந்திருந்தனர். ஆனால் இந்தக் கூட்டத்தை தமிழக அரசு புறக்கணித்தது.

காரணம், மும்மொழிக் கொள்கையில் மூன்றாவது மொழியை மாநில அரசுகளே தேர்வு செய்துகொள்ளலாம் என்று புதியக் கல்விக்கொள்கை கூறுகிறது. ஆனால் தமிழக அரசு இருமொழிக் கொள்கையில் உறுதியாக உள்ளனர். மேலும் பட்டப்படிப்பிற்கு நுழைவுத்தேர்வையும் தமிழக அரசு எதிர்க்கிறது. இந்நிலையில், தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு பிறகு நடக்கும் முதல் கல்விக்கொள்கை கூட்டத்தை தமிழக அரசு புறக்கணித்திருப்பதன் மூலம் தனது எதிர்ப்பை வெளிப்படுத்தியிருக்கிறது.

இதற்கு முன்னதாக, நேற்றே தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மத்திய அரசுக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதில், புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது தொடர்பாக ஆலோசனை செய்யும்போது செயலாளர்களான ஐஏஎஸ் அதிகாரிகள் மட்டத்தில் மட்டும் ஆலோசனை செய்யவேண்டாம்.புதிய  கல்விக் கொள்கை தொடர்பாக மாநில கல்வித்துறை அமைச்சர்களுடனும் ஆலோசனை நடத்தவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்