நாளை முதல் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையில் உள்ள சந்தைகளில் காய்கறிகளின் விலை கடுமையாக அதிகரித்துள்ளது.
அமைந்தகரை பகுதியில் உள்ள சந்தையில் காய்கறிகளை வாங்க காலை முதலே பொதுமக்கள் குவிந்தனர். மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற காவல்துறையினரும், மாநகராட்சி அதிகாரிகளும் அறிவுறுத்தினர். இதனிடையே முழு ஊரடங்கு காரணமாக கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலையை பல மடங்கு உயர்த்தியதால், சில்லறை விற்பனையிலும் காய்கறி விலை உயர்ந்துள்ளது.
15 ரூபாய்க்கு விற்பனையான ஒரு கிலோ தக்காளி 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதே போல ஒரு கிலோ பீன்ஸ் 200 ரூபாய்க்கும், கத்திரிக்காய் 150 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் 15 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ காய்கறிகள், தற்போது 40 ஆக அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாவதாகத் தெரிவித்துள்ளனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்