சென்னை தேனாம்பேட்டையில் அமைக்கப்பட்டுள்ள கொரானா தடுப்புக்கான WAR ROOM எனப்படும் கட்டளை மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்றிரவு திடீரென ஆய்வு செய்தார்.
டிஎம்எஸ் வளாகத்தில் செயல்படும் கட்டளை மையத்துக்கு இரவு 11 மணியளவில் முதலமைச்சர் வந்தார். அங்குள்ள அதிகாரிகளுடன் மையத்தின் செயல்பாடு குறித்து கேட்டறிந்தார். பொதுமக்களின் அழைப்புக்கு ஊழியர்கள் பதிலளிக்கும் பகுதிக்கு வந்த முதல்வர், ஒரு அழைப்பை தானே பெற்று, முதல்வர் ஸ்டாலின் பேசுகிறேன் என்று கூறி குறையைக் கேட்டறிந்தார்.
பின்னர், கட்டளை மையத்தில் கொரோனா தடுப்புப் பணிகளை தொய்வின்றி மேற்கொள்ள அதிகாரிகளிடம் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார். முதல்வர் ஆய்வு மேற்கொண்டபோது அவரது செயலாளர்கள் உதயசந்திரன், உமாநாத் மற்றும் தேசிய மக்கள் நல்வாழ்வு திட்ட இயக்குநர் தாரேஸ் ஆகியோர் உடனிருந்தனர். தனது இந்த ஆய்வு குறித்து ட்விட்டரில் முதல்வர் வீடியோவுடன் பதிவிட்டுள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்