தமிழ்நாட்டில் ஜூன் 21வரை நீட்டிக்கப்பட்ட ஊரடங்கில் 11 மாவட்டங்களுக்கு வழங்கப்பட்டுள்ள கூடுதல் தளர்வுகள் இன்று முதல் அமலுக்கு வருகின்றன. அதனை தெரிந்துகொள்வோம்.
கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், நீலகிரி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களுக்கு தளர்வுகளுடன் அத்தியாவசிய தேவைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வாடகை வாகனங்கள், டாக்சிகளில் இ-பதிவுடன் பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தனியார் பாதுகாப்பு சேவை நிறுவனங்கள், வீடு பராமரிப்பு சேவைகளை இ-பதிவுடன் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது மிதிவண்டி மற்றும் இருசக்கர வாகனங்கள் பழுதுநீக்கும் கடைகள் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது.
மின்பணியாளர், பிளம்பர், தச்சர், கணினி உள்ளிட்ட இயந்திரங்கள் பழுதுநீக்குவோர் வீடுகளுக்கு சென்று சேவையாற்ற காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அனுமதிக்கப்பட்டுள்ளது. வேளாண் உபகரணங்கள், பம்ப் செட் பழுது நீக்கும் கடைகள் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்படலாம். கண் கண்ணாடி விற்பனை, பழுதுநீக்கும் கடைகள் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மண்பாண்டம் மற்றும் கைவினைப் பொருட்கள் தயாரித்தல் மற்றும் விற்பனை காலை 6 மணி முதல் மாலை 5 மணி செயல்பட அனுமதிக்கப்படுகிறது.
ஏற்றுமதி நிறுவனங்கள், ஏற்றுமதி நிறுவனங்களுக்கு இடுபொருள் தயாரித்து வழங்கும் நிறுவனங்கள் 25 சதவீதம் பணியாளர்களுடன் செயல்படலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்