Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

ஜூன் 12-ல் மேட்டூர் அணை திறப்பு - முதல்வர் அறிவிப்பு

பாசனத்திற்காக ஜூன் 12-ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து நீர் திறக்கப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

காவிரி டெல்டா பாசன விவசாயத்திற்காக வருடந்தோறும் ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படுவது வழக்கம். ஆனால் போதிய நீர் இருப்பை கருத்தில்கொண்டுதான் இந்த அறிவிப்பு வெளியாகும். தற்போது குறுவை சாகுபாடிக்காக மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12-ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படும் என முதல்வர் அறிவித்திருப்பது விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் டெல்டா மாவட்டங்களில் ரூ.65.11 கோடியில் 647 பணிகள் நடைபெற்று வருவதாகவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

மொத்த கொள்ளளவு 120 அடிகொண்ட மேட்டூர் அணையில் தற்போதைய நீர்மட்டம் 97.13 அடியாகவும், நீர் இருப்பு 61.43 டிஎம்சியாகவும் உள்ளது. தற்போது அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேலும் தென்மேற்கு பருவமழை காரணமாக கர்நாடகாவில் தொடர்ந்து மழைபெய்யும் வாய்ப்பு இருப்பதால் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிக்கவும் வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. இதனைக் கருத்தில்கொண்டு இந்த அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதனால் திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, அரியலூர், பெரம்பலூர், கடலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்