Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

விரைவுச் செய்திகள்: சிபிஎஸ்இ +2 மதிப்பெண்| மல்லையாவின் சொத்துகள் | கருணாநிதி பிறந்தநாள்

சிபிஎஸ்இ +2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்ட போதிலும் எவ்வாறு மதிப்பெண் வழங்கப்படும் என ஏன் அறிவிக்கவில்லை? என்பது குறித்து இரண்டு வாரத்திற்குள் பதிலளிக்க சிபிஎஸ்இ நிர்வாகத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

14 மளிகை பொருட்கள் வழங்கும் திட்டம் தொடக்கம்: கொரோனா நிவாரணமாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு 14 மளிகை பொருட்களை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின். கொரோனா நிவாரண தொகை இரண்டாம் தவணையாக 2,000 ரூபாய் வழங்கும் திட்டமும் தொடக்கி வைக்கப்பட்டது.

செங்கல்பட்டில் தடுப்பூசி உற்பத்தி-நீதிமன்றம் நம்பிக்கை: செங்கல்பட்டு தடுப்பூசி தயாரிப்பு மையத்தை மத்திய- மாநில அரசுகள் செயல்பாட்டுக்கு கொண்டுவரும் என சென்னை உயர்நீதிமன்றம் நம்பிக்கை அளித்துள்ளது.

+2 பொதுத்தேர்வு நடக்குமா? ரத்தாகுமா?: தமிழகத்தில் +2 பொதுத்தேர்வை நடத்தலாமா?, வேண்டாமா? என கல்வியாளர்கள் மற்றும் பொதுமக்களிடம் கருத்துகளை கேட்டு தமிழ்நாடு அரசு விரைவில் முடிவெடுக்கவுள்ளது.

தடுப்பூசி போடும் பணி மீண்டும் தீவிரம்: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி மீண்டும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கோவை, தஞ்சை, கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள மக்கள் ஆர்வம் காட்டிவருகின்றனர்.

தேவேந்திர குல வேளாளர் என சான்று வழங்க உத்தரவு: தமிழகத்தில் 6 சாதிப்பிரிவினருக்கு தேவேந்திர குல வேளாளர் என்ற பொதுப்பெயரில் சான்றிதழ் வழங்கலாம் என மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 98வது பிறந்தநாள்: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 98வது பிறந்தநாளை ஒட்டி அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். மேலும் மாநிலம் முழுவதும் 38 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தையும் தொடங்கி வைத்தார்.

உடலைத்தர ரூ.4 லட்சம் கேட்ட மருத்துவமனை: கொரோனாவால் இறந்தவரின் உடலை ஒப்படைக்க மருத்துவமனை 4 லட்சம் ரூபாய் கேட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறப்பு ஐஏஎஸ் அதிகாரியின் எச்சரிக்கையை அடுத்து உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

பயனாளர்களை ஏமாற்றும் வாட்ஸ்அப்: புதிய தனியுரிமைக் கொள்கைக்கு பயனாளர்களை ஏமாற்றி வாட்ஸ்அப் ஒப்புதல் பெறுகிறது என டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பில் குற்றச்சாட்டப்பட்டுள்ளது.

மல்லையாவின் சொத்துகள் வங்கிகளுக்கு சொந்தம்: இங்கிலாந்துக்கு தப்பியோடிய விஜய் மல்லையாவின் 5 ஆயிரத்து 600 கோடி சொத்துகள் கடன் கொடுத்த வங்கிகளுக்கு சொந்தம் என மும்பை பண மோசடி தடுப்பு நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்