Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

27 மாவட்டங்களில் துணிக்கடை, நகைக்கடைகளுக்கு அனுமதி

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்கள் மட்டுமின்றி மேலும் 23 மாவட்டங்களிலும் இன்று முதல் துணிக்கடை, நகைக் கடைகள் திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது

கொரோனா தடுப்புக்கான ஊரடங்கு நீட்டிப்பின்போது, வகை 3ல் உள்ள சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் துணிக்கடைகள், நகைக்கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று மாலை வெளியிடப்பட்ட மற்றொரு அறிவிப்பில், வகை 2ல் உள்ள 23 மாவட்டங்களுக்கு மேலும் சில தளர்வுகளை தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது. அதன்படி, வகை 2இல் திருச்சி, அரியலூர், கடலூர், தருமபுரி, மதுரை, நெல்லை, ராமநாதபுரம், தூத்துக்குடி, வேலூர் ஆகிய மாவட்டங்களில் நகைக்கடைகள், ஜவுளிக் கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது இதோடு திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, பெரம்பலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களிலும் ஏற்கனவே அளிக்கப்பட்ட தளர்வுகளோடு நகை மற்றும் ஜவுளிக் கடைகள் திறக்கப்பட உள்ளன.

வகை 2 இல் உள்ள ராணிப்பேட்டை, சிவகங்கை, தேனி, தென்காசி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், விருதுநகர் மாவட்டங்களுக்கும் இந்த கூடுதல் தளர்வுகள் பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை 50% வாடிக்கையாளர்களுடன் குளிர்சாதன வசதியின்றி செயல்பட வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் இந்த அனுமதியை மாநில அரசு வழங்கியுள்ளது. பொது மக்கள், வணிக அமைப்பினரின் கோரிக்கையை ஏற்று இந்த கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்