Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

3.65 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி தமிழகம் வருகை - மாவட்டங்களுக்கு அனுப்பும் பணிகள் தீவிரம்

தமிழகத்துக்கு 3.65 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் வந்து சேர்ந்துள்ளன.

கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நாடுமுழுவதும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போது தடுப்பூசி விநியோகத்தை மத்திய அரசே பொறுப்பேற்று மாநிலங்களுக்கு பிரித்து வழங்கிவருகிறது. இதற்கிடையே தமிழகம் உட்பட பல மாநிலங்களில் பல்வேறு இடங்களில் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் மையங்களுக்கு சென்ற மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். மேலும் கொரோனா தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள தடுப்பூசி செலுத்தவேண்டும் என போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், மத்திய அரசிடமிருந்து தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய 3.65 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் புனேவில் இருந்து விமானம் மூலம் சென்னை கொண்டுவரப்பட்டுள்ளன. விமான நிலையம் வந்திறங்கிய தடுப்பூசியை மருத்துவத்துறை அதிகாரிகள் பெற்றனர். இன்னும் சற்று நேரத்தில் இந்த தடுப்பூசிகள் தேனாம்பேட்டையில் உள்ள மாநில தடுப்பூசி கிடங்கிற்கு கொண்டுவரப்பட்டு அங்கிருந்து மாவட்டங்களுக்கு பிரித்தனுப்பப்பட உள்ளது. இந்த தடுப்பூசிகள் 18-44 வயதினருக்கு செலுத்துவதற்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

நேற்றையதினம் 65 ஆயிரம் டோஸ் கோவாக்சின் தடுப்பூசிகள் தமிழகத்திற்கு கொண்டுவரப்பட்டு மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பப்படும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் பல்வேறு மாவட்டங்களில் உள்ள தடுப்பூசி பற்றாக்குறை சரிசெய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்