Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வெல்லும் தமிழக வீரர்களுக்கு ரூ.3 கோடி பரிசு - மு.க.ஸ்டாலின்

ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வெல்லும் தமிழக வீரர்களுக்கு ரூ. 3 கோடி பரிசு வழங்கப்படும் என அறிவித்துள்ளார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.

விளையாட்டு வீரர்களுக்கான கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் மற்றும் ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ளும் வீரர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்வை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் தொடங்கி வைத்தார். அப்போது ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த 6 வீரர்களுக்கு தலா ரூ.5 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. நிகழ்வின்போது பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் ''விளையாட்டு போட்டியில் "டீம் ஸ்பிரிட்" மிக முக்கியமானது. உடலுக்கும், மனதுக்கும் ஊக்கம் தரும் வகையில் இந்த நிகழ்ச்சி அமைந்துள்ளது.

விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. விளையாட்டு வீரர்களுக்கு உடல் உறுதியும் ஊக்கமும் அவசியம். விளையாட்டு வீரர்கள் அடுத்த தலைமுறைக்கு ஊக்கம் தரக்கூடியவர்கள். தமிழ்நாட்டை சேர்ந்த வீரர்களுக்கு தமிழக அரசுப் பணி வழங்கப்பட்டு வருகிறது. விளையாட்டு வீரர்களுக்கு ரூ.10 லட்சம் வரை கருவிகள், பயண சீட்டு உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. ஜப்பானில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் 7 தமிழக வீரர்- வீராங்கனைகள் பங்கேற்கின்றனர் என்பதில் பெருமகிழ்ச்சி அளிக்கிறது.

நம் விளையாட்டு வீரர்களுக்கு கொரோனா தடுப்பூசியிடும் நிகழ்வை மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் நேரு விளையாட்டு அரங்கில் இன்று தொடங்கிவைத்து ஒலிம்பிக்கில் பங்கேற்கும் 6 வீரர்களுக்கு தலா ரூ.5 லட்சம் வழங்கி ஊக்குவித்தார்கள். ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல வாழ்த்துகள் @SMeyyanathan pic.twitter.com/0FWbbWIqHO
— Udhay (@Udhaystalin) June 26, 2021

ஏற்கனவே ஒரு வீராங்கனைக்கு ரூ.5 லட்சம் வழங்கப்பட்ட நிலையில் மற்ற 6 பேருக்கு ரூ. 5 லட்சம் வழங்கப்படும். தமிழ்நாட்டில் 4 ஒலிம்பிக் அகாடமிகள் அமைக்கப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் உறுதி அளிக்கப்பட்டது. திமுக அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். விளையாட்டுக்கு தொடர்ந்து ஊக்கம் அளித்தால் அமெரிக்கா போன்ற நாடுகளை பின்னுக்கு தள்ளும் நாட்கள் தொலைவில் இல்லை.

மாற்றுத் திறனாளி விளையாட்டு வீரர்-வீராங்கனைகளுக்கு வீட்டுக்கே சென்று தடுப்பூசி செலுத்தப்படுகிறது. ஒலிம்பிக்கில் தங்க பதக்கம் வெல்லும் தமிழக வீரர்களுக்கு ரூ. 3 கோடி பரிசு வழங்கப்படும். ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வெல்வோருக்கு ரூ. 2 கோடி, வெண்கலம் வென்றால் ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும்'' என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

கருத்துரையிடுக

0 கருத்துகள்