Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

"சந்திர பிரியங்கா எனும் நான்"- புதுச்சேரியில் 40 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு பெண் அமைச்சர்!

யூனியன் பிரதேசமான புதுச்சேரி அமைச்சரவையில் சுமார் 40 ஆண்டுகளுக்கு பிறகு பெண் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். நான்கு பிராந்தியங்களை உள்ளடக்கிய புதுச்சேரியில் உள்ள காரைக்கால் பிராந்தியத்தை சேர்ந்த நெடுங்காடு தொகுதியின் உறுப்பினர் சந்திர பிரியங்காதான் அந்த பெண் அமைச்சர். நமது ராஜ்ஜியம் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். 

யார் இவர்?

image

புதுச்சேரி - காரைக்கால் பிராந்தியத்தில் அரசியலில் செல்வாக்கு மிக்கவரான மறைந்த முன்னாள் அமைச்சர் சந்திர காசுவின் மகள்தான் சந்திர பிரியங்கா. சந்திர காசு ஆறு முறை நெடுங்காடு தொகுதியில் போட்டியிட்டு சட்டப்பேரவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு பணியாற்றியுள்ளார். அதில் இரண்டு முறை அமைச்சராகவும் இருந்துள்ளார். அவரது அரசியல் வாரிசாக 2016 புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் நெடுங்காடு தொகுதியில் போட்டியிட்டு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார் சந்திர பிரியங்கா. 

தொடர்ந்து கடந்த 2021 தேர்தலிலும் அதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த தொகுதி பட்டியல் இனத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே போட்டியிடும் தனி தொகுதியாகும். 31 வயதான சந்திர பிரியங்கா தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் உறுப்பினரை 2214 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

image

கடந்த 1963 முதல் செயல்பட்டு வரும் புதுச்சேரி சட்டப்பேரவையில் இரண்டாவது முறையாக ஒரு பெண் உறுப்பினர் அமைச்சராகி உள்ளார். இதற்கு முன்னதாக புதுச்சேரி அமைச்சரவையில் ரேணுகா அப்பாதுரை என்பவர் இடம்பெற்று இருந்தார். முன்னாள் பொருளாதார பேராசிரியையான ரேணுகா அப்பாதுரை தன்னை காங்கிரஸ் கட்சியில் இணைத்துக் கொண்டு 1980 தேர்தலில் ரெட்டியார்பாளையம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். திமுக - காங்கிரஸ் கூட்டணியில் அமைந்த அந்த அமைச்சரவையில் கல்வித்துறை அமைச்சராக அவர் பணியாற்றி இருந்தார். அதன்பிறகு பல பெண் உறுப்பினர்கள் தேர்வாகி இருந்தாலும் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளது இதுவே முதல்முறை. 

image

ரங்கசாமியின் மாஸ்டர் பிளான்

புதுச்சேரி முதல்வராக ரங்கசாமி பொறுப்பேற்றுக் கொண்டு 50 நாட்களை கடந்த சூழலில் அவரது தலைமையிலான அரசில் அமைச்சர்களை நியமிப்பது கூட்டணி கட்சிகளான என்.ஆர். காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே நீடித்த குழப்பங்கள் சிக்கலை ஏற்படுத்தின. இறுதியில் அண்மையில் ஏற்பட்ட உடன்பாட்டின்படி என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு மூன்று அமைச்சர்கள் மற்றும் பாஜகவுக்கு 2 அமைச்சர் பதவிகள் ஒதுக்கப்பட்டன. 

மக்களின் மனநிலை, அரசியல் அழுத்தம் மற்றும் உட்கட்சி பூசலை சமாளிக்க அரசியலில் அனுபவ மிக்கவரான முதல்வர் ரங்கசாமி தனது கட்சியின் பெண் சட்டப்பேரவை உறுப்பினரான சந்திர பிரியங்காவை அமைச்சராக நியமித்துள்ளதாக புதுச்சேரி அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக பிரியங்கா காரைக்கால் பிராந்தியத்தை சேர்ந்தவர் மற்றும் பெண் உறுப்பினராக இருப்பதால் ரங்கசாமி அவரை அமைச்சராக நியமித்துள்ளாராம். இது அவரது அரசியல் தந்திரம் எனவும் சொல்லப்படுகிறது. 

தற்போதைய புதுச்சேரி சட்டப்பேரவையில் இடம்பெற்றுள்ள ஒரே ஒரு பெண் உறுப்பினரும் அமைச்சர் சந்திர பிரியங்காதான்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்