Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

இந்தியாவில் தொடர்ந்து குறையும் கொரோனா பாதிப்பு: 50 நாட்களுக்கு பிறகு 1,27,510 ஆக சரிவு

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,27,510 பேருக்குக் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது . இது கடந்த ஏப்ரல் 9-ம் தேதிக்கு பிறகு குறைந்த எண்ணிக்கையாகும்.

இந்தியாவில் கொரோனா பரவலின் வேகம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,27,510 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,81,75,044 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 2,795 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்த நிலையில், கொரோனாவால் இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,31,895 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் கடந்த 24 மணி நேரத்தில் 2,55,287 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,59,47,629 ஆக அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் தற்போது 18,95,520 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நேற்று வரையில் 21,60,46,638 பேர் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்