Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

உருமாறிய கொரோனா வைரஸ்களுக்கு பெயர் சூட்டிய உலக சுகாதார அமைப்பு

உருமாறிய கொரோனா வைரஸ்களுக்கு கிரேக்க எழுத்துக்களை பெயர்களாக அறிவித்துள்ளது உலக சுகாதார அமைப்பு. அதன்படி முதன்முதலில் இந்தியாவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வகைக்கு 'டெல்டா' எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனாவுக்கு ஆல்ஃபா என்றும், தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்டதற்கு பீட்டா என்றும் பெயரிடப்பட்டுள்ளது. அதேபோல் பிரேசிலில் முதன்முதலில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனாவுக்கு 'காமா' என பெயரிடப்பட்டுள்ளது. இந்த நான்கு வகை உருமாறிய கொரோனாவும் அதிக அளவில் பரவுவதால் அதிக அபாயகரமானவையாக பார்க்கப்படுகின்றன.

இதேபோல் அமெரிக்காவில் கண்டறியப்பட்ட வகைக்கு 'எப்சிலான்', என்பது உள்ளிட்ட மேலும் ஐந்து வகைகளுக்கும் பெயரிடப்பட்டுள்ளது. இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ள மற்றொரு உருமாறிய கொரோனாவுக்கு 'கப்பா' என்று பெயரிடப்பட்டுள்ளது.

உருமாற்றம் காணும் கொரோனாவுக்கு அது முதலில் கண்டறியப்பட்ட நாட்டின் பெயரை சூட்டுவதற்கு பரவலாக எதிர்ப்பு எழுந்த நிலையில் கிரேக்க எழுத்துக்களை கொண்டு அழைக்கும் முறையை உலக சுகாதார அமைப்பு அறிமுகப்படுத்தியுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்