Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

சட்டப்பேரவை முதல் கூட்டத்தொடரிலேயே ‘நீட்’ தேர்வுக்கு எதிரான மசோதா: தினகரன் வலியுறுத்தல்

தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடரிலேயே 'நீட்' தேர்வுக்கு எதிரான மசோதாவை நிறைவேற்றி குடியரசுத்தலைவரின் ஒப்புதலைப் பெற வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக டிடிவி.தினகரன் வெளியிட்டுள்ள ட்வீட்டில், “தி.மு.க தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்ததை போல, நாளை தொடங்கவிருக்கும் தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடரிலேயே 'நீட்' தேர்வுக்கு எதிரான மசோதாவை நிறைவேற்றி குடியரசுத்தலைவரின் ஒப்புதலைப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

இதன் மூலம், 2010ஆம் ஆண்டு மத்திய அரசில் தி.மு.க அங்கம் வகித்த போது ஏழை,எளிய கிராமப்புற மாணவர்களின் 'டாக்டர்' கனவை சிதைக்கும் ' நீட்' தேர்வை கொண்டுவந்த தவறுக்கு பிராயசித்தம் தேடிக்கொள்ள தற்போது கிடைத்திருக்கும் நல்லதொரு வாய்ப்பை பயன்படுத்திட வேண்டும்” என தெரிவித்தார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்