Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

டாஸ்மாக் கடைகள் திறப்பு ஏன்? - முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்

'கொரோனா குறைந்து வரும் காரணத்தால் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுகிறது' என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 
சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ''நாங்கள் ஆட்சிக்கு வந்தபோது தினசரி கொரோனா பாதிப்பு 36 ஆயிரமாக இருந்தது; 60 ஆயிரத்தை தொடும் என்றார்கள்; அதனை தடுத்துள்ளோம். திமுக ஆட்சியில் கொரோனா பரவல் தடுக்கப்பட்டுள்ளது. அதிகளவில் தடுப்பூசிகளை வழங்குமாறு ஒன்றிய அரசிடம் வலியுறுத்தியுள்ளோம். கொரோனா பரவலை முற்றிலும் தடுக்க ஒத்துழைக்குமாறு பொதுமக்களிடம் கெஞ்சிக் கேட்டுகொள்கிறேன்.
 
கொரோனா பரவல் குறைந்ததை கவனத்தில்கொண்டு சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன; அதில் ஒன்றுதான் டாஸ்மாக் திறப்பு. ஜூன் 17ஆம் தேதி பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்கப்பட்டுள்ளது'' என்று தெரிவித்தார்.
இதனிடையே, கொரோனா தொற்று கணிசமாக குறைந்து வருவதால், டாஸ்மாக் கடைகளை திறக்க வருவாய்த்துறை முடிவெடுத்துள்ளது என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவது குறித்து எழுந்துள்ள விமர்சனத்திற்கு அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்