Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

பேரணியில் ஈடுபட்ட விவசாயிகள் மீது பதிவு செய்த வழக்குகளைத் திரும்பப் பெறுங்கள்: எஸ்கேஎம்

போராட்ட பேரணியில் ஈடுபட்ட விவசாயிகள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெறவேண்டும் என சம்யுக்ட் கிசான் மோர்ச்சா(எஸ்கேஎம்)  கோரிக்கை வைத்துள்ளது.

மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் நடக்கும் ஏழு மாத தொடர் போராட்டங்களைக் குறிக்கும் வகையில், விவசாயிகள் சனிக்கிழமையன்று பல்வேறு மாநிலங்களில் உள்ள ராஜ் பவனை நோக்கி சென்று ஆளுநர்களிடமும் நினைவுக்குறிப்பை சமர்ப்பிக்க பேரணியாக அணிவகுத்துச் சென்றனர்.

இது தொடர்பாக சண்டிகரில், 147, 148, 149, 186, 188, 332 மற்றும் 353 ஐபிசி பிரிவுகளின் கீழ் பல எஸ்.கே.எம் தலைவர்கள் மற்றும் பல விவசாயிகள் அமைப்பின் தலைவர்களுக்கு எதிராக எஃப்..ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

image

இந்த பேரணியின்போது சாலைகளைத் தடுத்து நிறுத்திய போலீசார், எங்கள் மீது தண்ணீர் பீரங்கிகள் மற்றும் தடியடியை பயன்படுத்தவும் முயன்றனர். இத்தகைய ஜனநாயக விரோத மற்றும் சர்வாதிகார நடத்தைக்கும் மேலாக, இப்போது எஸ்.கே.எம் தலைவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது ஜனநாயகத்தின் தோல்வி மற்றும் அறிவிக்கப்படாத அவசரநிலைக்கு ஒரு எடுத்துக்காட்டாக உள்ளது. எனவே, விவசாயிகள் மற்றும் தலைவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட எஃப்..ஆர்களை உடனடியாக நிபந்தனையின்றி திரும்பப் பெற வேண்டும் " என்று எஸ்கேஎம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மத்திய அரசின் மூன்று வேளாண் சட்ட எதிர்ப்பு போராட்டங்களுக்கு தலைமை தாங்கும் அமைப்பாக எஸ்.கே.எம் உள்ளது.

மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் டெல்லி மற்றும் ஹரியானா இடையேயான சிங்கு, திக்ரி மற்றும் காசிப்பூர் எல்லைகளில் முகாமிட்டு விவசாயிகள் தங்கள் போராட்டத்தைத் தொடங்கினர். கடந்த 7 மாதங்களாக இந்த போராட்டம் பனி, மழை,வெயிலை கடந்து தொடர்ந்து வருகிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்