கொரோனா பெருந்தொற்று நோயால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான நலத்திட்டங்களை அரசு எப்படி செயல்படுத்தப் போகிறது? என்ற விரிவான அறிக்கை வேண்டும் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு பத்து லட்ச ரூபாய் வைப்புத்தொகை அளிப்பதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையில்தான், அறிக்கை வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்றால் பெற்றோர்களை இழந்த பிள்ளைகளுக்கு உதவுமாறும், அதற்கான நடவடிக்கையை மாநில அரசுகள் முன்னெடுக்குமாறு அண்மையில் உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது.
அதையடுத்து டெல்லி, சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ஹரியானா, தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, பீகார் ஆகிய மாநிலங்கள் கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்து ஆதரவற்று நிற்கும் குழந்தைகளுக்கான உதவி திட்டங்களை அறிவித்துள்ளன.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்