Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

வண்டலூர் பூங்காவில் ஆண் சிங்கம் உயிரிழப்பு

சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் கொரோனாவுக்கு ஆண்சிங்கம் ஒன்று உயிரிழந்துள்ளது.

கடந்த மே 26ஆம் தேதிமுதல் கொரோனா 2ஆம் அலை காரணமாக வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா கால வரையறையின்றி மூடப்பட்டது. பூங்கா ஊழியர்கள் மட்டுமே உள்ளே சென்றுவர அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் 9 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதில் நீலா என்ற 9 வயது பெண்சிங்கம் உயிரிழந்தது. இதனால் மற்ற சிங்கங்கள் தனிமைப்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வந்தன. சிங்கங்கள் தவிர மேலும் சில விலங்குகளுக்கும் கொரோனா தொற்று உறுதியானதால் அவைகளும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தன.

இந்நிலையில் தற்போது ஆண் சிங்கம் ஒன்றும் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளது. வண்டலூர் பூங்காவில் கொரோனா பரவலைத் தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்