Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

வெளிநாடு தப்பாமல் இருக்க சிவசங்கர் பாபாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ்

போக்சோ வழக்கில் சிக்கி விசாரணை நடைபெற்று வரும் நிலையில் வெளிநாடு தப்பாமல் இருக்க சிவசங்கர் பாபாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ் வெளியிடப்பட்டது.

சுஷில் ஹரி பள்ளி நிறுவனர்  சிவசங்கர் பாபா மீது பள்ளி மாணவிகள் பல குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தனர். அதனை மையமாக வைத்து குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் நேரடியாக விசாரணை நடத்தியது. இதன்படி பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகார் தொடர்பாக சிவசங்கர் பாபா உட்பட சிலர்மீது பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம், போக்சோ சட்டம், தொழில்நுட்ப தகவல் சட்டம் உட்பட 8 பிரிவுகளின்கீழ் மாமல்லபுரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து சிவசங்கர் பாபா மீதான பாலியல் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றம்செய்து டிஜிபி திரிபாதி உத்தரவிட்டார். சிவசங்கர் பாபா டேராடூனில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதால் வேறொரு மாநிலத்திற்கு சென்று விசாரணை நடத்த ஏதுவாக சிபிசிஐடிக்கு மாற்றப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

image

இந்நிலையில் சிவசங்கர் பாபாவை விசாரிக்க சிபிசிஐடி தனிப்படை டேராடூன் விரைந்துள்ளது. மேலும், சிவசங்கர் பாபா வேறு நாட்டிற்கு தப்பிச்செல்ல வாய்ப்பு இருப்பதால் லுக் அவுட் நோட்டீஸ் வழங்கவும் சிபிசிஐடி முடிவு செய்திருந்தது. இந்நிலையில், அவருக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ் வெளியிடப்பட்டுள்ளது. 

இதற்கிடையே, பள்ளி மாணவிகள் கொடுத்த தகவலில் அடிப்படையில் சிவசங்கர் பாபாவுக்கு உடந்தையாக இருந்த ஆசிரியைகளின் பட்டியலை சிபிசிஐடி சேகரித்து வருகிறது. ஆசிரியைகளையும் பிடிக்கும் நடவடிக்கையில் சிபிசிஐடி தீவிரம் காட்டிவரும் நிலையில், பள்ளியின் பொறுப்பாளர் ஜானகியின் மருமகள் பாரதி, பள்ளி ஆசிரியை தீபா மீதும் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்