Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

யூரோ கோப்பை: மைதானத்தின் பாதியில் இருந்து கோல் அடித்த பேட்ரிக் சிக் - குவியும் பாராட்டு

யூரோ கோப்பை கால்பந்து போட்டி தொடரில் செக் குடியரசு வீரர் பேட்ரிக் சிக் மைதானத்தில் பாதி தூரத்தில் இருந்து கோல் அடித்தார். இவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

யூரோ கோப்பை கால்பந்து தொடரின் முதல்கட்ட லீக் போட்டிகள் தொடர்ந்து விறு விறுப்புடன் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று டி பிரிவில் இடம்பெற்றுள்ள செக் குடியரசு அணியும் ஸ்காட்லாந்து அணியும் பலப்பரிட்சை நடத்தியது. இதில் இரண்டு அணிகளும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில்,ஆட்டத்தின் 42 வது நிமிடத்தில் செக் குடியரசு அணி வீரர் பேட்ரிக் சிக் ஒரு கோல் அடித்து தனது அணியின் கோல் கணக்கை துவங்கினார்.

image

இதையடுத்து வாங்கிய கோலை திருப்பும் நோக்கில் விளையாண்ட ஸ்காட்லாந்து அணி தாக்குதல் ஆட்டத்தை தொடர்ந்தது. ஆட்டத்தின் 52 வது நிமிடத்தில் ஸ்காட்லாந்து அணி கோல்கீப்பர் மார்சல் பந்தை தனது அணி வீரரிடம் அடித்துவிட்டு கோல் பாக்ஸுக்கு வெளியே நின்றிருந்தார். அப்போது மைதானத்தில் பாதியில் பந்தை எடுத்த செக் குடியரசு வீரர் பேட்ரிக் சிக், ஸ்காட்லாந்து அணி கோல் கீர்ப்பர் கோல் கம்பத்தை விட்டு வெளியே இருப்பதைக் கண்டு பந்தை நேராக கோல் கம்பத்தை நோக்கி அடித்தார்.

இதை பார்த்த ஸ்காட்லாந்து கோல் கீப்பர் மார்சல் எப்படியாவது பந்தை தடுக்க வேண்டுமென ஓடிவந்தார் ஆனால், அவர் வருவதற்குள் பந்து கிளாசிக் கோலானது. இதையடுத்து செக் குடியரசு அணி 2:0 என்ற கோல் கணக்கில் ஸ்காட்லாந்து அணியை வீழ்த்தியது. செக் குடியரசு வீரர் பேட்ரிக் சிக் அடித்த கோல்தான் இந்த தொடரில் நீண்ட தூரத்தில் இருந்து அடிக்கப்பட்ட கோலாகும். இவருக்கு ரசிகர்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

எம்.கலீல்ரஹ்மான்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்