பிரான்ஸின் பாரீஸ் நகரில் நடைபெற்ற பிரெஞ்சு ஓபன் தொடரில், ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதி சுற்றில் முதல் நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 4 மணி நேரம் 11 நிமிடங்கள் போராடி 6-7 (6-8), 2-6, 6-3, 6-2, 6-4 என்ற செட் கணக்கில் கிரீஸ் நாட்டின் ஸ்டீபனோஸ் சிட்சிபாஸை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். ஜோகோவிச் வெல்லும் 19-வதுகிராண்ட் ஸ்லாம் பட்டம் இதுவாகும். அதேவேளையில் பிரெஞ்சு ஓபனில் அவர் மகுடம் சூடுவது இது 2-வது முறையாகும்.
போட்டி முடிவடைந்ததும் ஜோகோவிச் தான் பயன்படுத்திய டென்னிஸ் ராக்கெட்டை, களத்தில் தன்னை உற்சாகப்படுத்திய சிறுவனுக்கு பரிசாக கொடுத்துஅவனை இன்ப அதிர்ச்சிக்குள்ளாக் கினார். இதுகுறித்து ஜோகோவிச் கூறும்போது, “அந்த சிறுவனை எனக்கு தெரியாது. ஆனால் ஆட்டம் முழுவதும் அவர், கூறிக்கொண்டிருந்தது என் காதுகளில்விழுந்து கொண்டிருந்தது. குறிப்பாக நான் முதல் இரு செட்களில் பின்தங்கியிருந்த போது என்னை உற்சாகப்படுத்திக்கொண்டே இருந்தார். சர்வீஸை வைத்துக் கொள்ளுங்கள், முதல் பந்தை எளிதாக பெறுங்கள், பின்கையை பயன்படுத்துங்கள் என ஆலோசனை கூறினார்.
0 கருத்துகள்