Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

பிரெஞ்சு ஓபன்: ரபேல் நடாலை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் நோவக் ஜோகோவிச்

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் களிமண் ஆடுகளங்களின் மைந்தனாக போற்றப்படும் ரஃபேல் நடாலை உலகின் நம்பர் ஒன் வீரரான நோவக் ஜோகோவிச் வீழ்த்தினார்.

ரசிகர்களின் உச்சகட்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்ற இப்போட்டியில் பிரெஞ்ச் ஓபனில் 14-ஆவது முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழையும் முனைப்பில் நடாலும், 5 ஆண்டுகளுக்குப் பின் நடாலை வீழ்த்தும் முனைப்பில் ஜோகோவிச்சும் பலப்பரீட்சை நடத்தினர். ஆட்டத்தின் முதல் செட்டை 6-3 என்ற புள்ளிகள் கணக்கில் நடால் கைப்பற்றி அசத்தினார். சுதாரித்து விளையாடிய ஜோகோவிச் இரண்டாவது செட்டை 6-3 என்ற கணக்கில் கைப்பற்றி மிரள வைத்தார்.

image

3 ஆவது செட்டிலும் ஆதிக்கம் செலுத்திய ஜோகோவிச், 7-6 என்ற கணக்கில் கைப்பற்றி நடாலுக்கு அதிர்ச்சி கொடுத்தார். ஆட்டம் 5 சுற்றுகள் வரை செல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நான்காவது சுற்றையும் 6-2 என்ற கணக்கில் கைப்பற்றி ஜோகோவிச் வெற்றியை வசப்படுத்தினார். மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டி 4 மணி நேரம் 10 நிமிடங்கள் நீடித்தது. கடந்த 5 பிரெஞ்ச் ஓபன் தொடர்களில் நடாலை ஜோகோவிச் வீழ்த்துவது இதுவே முதல்முறையாகும்.

நாளை நடைபெறும் பிரமாண்ட இறுதிப்போட்டியில் கிரீஸ் வீரர் சிட்சிபாஸுடன் ஜோகோவிச் பலப்பரீட்சை நடத்தவுள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்