Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

மூன்றாம் நாள் ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே விராட் கோலி அவுட்

நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டம் தொடங்கியதும் மேற்கொண்டு ரன் ஏதுவும் எடுக்காமல் இந்திய கேப்டன் விராட் கோலி அவுட்டானார். முதல் இன்னிங்ஸில் 44 ரன்களை சேர்த்த நிலையில் கயில் ஜேமிசன் பந்து வீச்சில் அவர் அவுட்டானார். கடந்த வெள்ளிக்கிழமை அன்று தொடங்கியது இந்த ஆட்டம். முதல் நாள் மழையினால் கைவிடப்பட்ட நிலையில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் நியூசிலாந்து டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. 

முதலில் பேட் செய்த இந்திய அணி அடுத்தடுத்து மூன்று விக்கெட்டுகளை இழந்தது. ரோகித், கில், புஜாரா என மூவரும் பெவிலியன் திரும்ப கேப்டன் கோலியும், துணை கேப்டன் ராஹானேவும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவரும் 61 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 

கோலி ஸ்டம்லைனில் வரும் பந்துகளை மட்டுமே குறிவைத்து ஆடினார். வெளியே செல்லும் பந்துகளை தொடாமல் விட்டு விடுவார். தனது இன்னிங்ஸை மிகவும் நிதானமாக செதுக்கினார் அவர். பெரிய ஸ்கோர் அடிப்பார் என்ற எதிர்பார்ப்பு எழுந்த சூழலில் இன்று ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலே விக்கெட்டை அவர் இழந்தார். 132 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து LBW முறையில் அவுட் ஆனார். 44 ரன்களில் ஒரே ஒரு பவுண்டரி மட்டும் அடங்கும். மழை மற்றும் போதுமான வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் நடைபெறுவதில் சிக்கல் நிலவி வருகிறது.

விராட் கோலி ஆட்டமிழந்ததை தொடர்ந்து ரிஷப் பண்ட் களமிறங்கினார். 22 பந்துகளை சந்தித்த அவர் ஒரு பவுண்டரி மட்டுமே அடித்து 4 ரன்னில் நடையைக் கட்டினார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்