Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

விரைவுச் செய்திகள்: பள்ளிகள் திறப்பு | டெல்லியில் மதுபானங்கள் | ஒலிம்பிக்கில் முதல் அணி

தளர்வில்லா ஊரடங்கு முடிந்த பிறகே பள்ளிகள் திறப்பது குறித்து அறிவிக்கப்படும் என தொடக்க கல்வி இயக்குநர் விளக்கம் அளித்துள்ளார். ஒன்று முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அனைவரையும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

கிராமங்களில் மளிகைப்பொருள் கிடைப்பதில் சிக்கல்: கிராமப்புறங்களிலும் மளிகைப் பொருட்கள் தடையின்றி கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும் எனவும், அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஊரடங்கிற்கு விரைவில் முற்றுப்புள்ளி - முதல்வர்: மக்கள் ஒத்துழைத்தால் ஊரடங்கிற்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கலாம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட வீடியோவில் உறுதியளித்துள்ளார்.

தினசரி பாதிப்பு 1.5 லட்சத்துக்கு கீழ் சரிந்தது: இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்து 27ஆயிரமாக சரிந்துள்ளது. சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 43 நாட்களுக்குப் பிறகு 20 லட்சத்திற்கு கீழ் குறைந்தது.

கருக்கலைப்பு செய்த மருத்துவரிடம் விசாரணை: முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை அளித்த பாலியல் புகார் குறித்து கருக்கலைப்பு செய்த மருத்துவரிடம் விசாரணை நடத்த காவல்துறை முடிவு செய்துள்ளது.

உருமாறிய கொரோனாவின் பெயர் 'டெல்டா': இந்தியாவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனாவுக்கு டெல்டா எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. பிற நாடுகளில் உருமாற்றம் கண்ட வைரசுகளுக்கும் உலக சுகாதார அமைப்பு கிரேக்கப் பெயர்களை சூட்டியது.

கொரோனா சிகிச்சை - புதிய விதிமுறைகள்: கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் ஆக்சிஜன் அளவு 94க்கு மேல் இருந்தால் மருத்துவமனையில் அனுமதிக்க தேவையில்லை உள்ளிட்ட சிகிச்சை தொடர்பான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக மருத்துவத்துறை வெளியிட்டது.

வாட்ஸ் அப்பில் மதுபானங்கள் விற்றது யார்?: வாட்ஸ் அப்பில் குழுக்கள் அமைத்து மதுபானங்களை விற்ற கும்பலை தேடும்பணியில் காவல்துறையினர் தீவிரம் காட்டிவருகின்றனர். வனப்பகுதி வழியே மதுபாட்டில்களை கடத்துவோரை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தீ விபத்தில் தீக்கிரையான வீடு: திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே வீடு தீப்பற்றி எரிந்தது. உரிய நேரத்தில் கைக்குழந்தையுடன் வெளியேறியதால் தம்பதியினர் உயிர்தப்பினர்.

டெல்லியில் மதுபானங்கள் 'டோர் டெலிவரி': தலைநகர் டெல்லியில் மதுபானங்களை வீடுகளுக்கே சென்று விநியோகம் செய்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்தால் இந்திய மற்றும் வெளிநாட்டு மதுபானங்களை பெற முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அருணாச்சல் - சரிந்து விழுந்த நெடுஞ்சாலை: அருணாச்சல பிரதேசத்தில் கனமழை காரணமாக நெடுஞ்சாலை சரிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக வாகனங்கள் விபத்திலிருந்து தப்பியது.

இஸ்ரேலில் ஆட்சியமைக்கும் எதிர்க்கட்சிகள்: இஸ்ரேலில் எதிர்க்கட்சிகள் கூட்டணி சேர்ந்து ஆட்சியமைக்க முடிவு செய்துள்ளது. ஆளும் லிக்விட் கட்சிக்கு பெரும்பான்மை இல்லாததால் பிரதமர் நெதன்யாகு பதவி விலகுகிறார்.

ஒலிம்பிக் - முதல் அணியாக ஜப்பான் சென்ற ஆஸி: ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க முதல் அணியாக ஜப்பான் சென்றது ஆஸ்திரேலியா. கொரோனா சூழலுக்கு மத்தியிலும், சாப்ட்பால் அணி வீராங்கனைகள் ஒலிம்பிக் களத்திற்கு சென்றனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்