Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

சிரியா, ஈராக் எல்லையில் அமெரிக்கா வான்வழித் தாக்குதல்

சிரியா, ஈராக் எல்லையில், அமெரிக்கா வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது.

ஈராக்கில் உள்ள அமெரிக்க படைகள் மீது, ஆளில்லா விமானங்கள் மூலம் ஈரான் பயங்கரவாத அமைப்புகள் தொடர் தாக்குதலை நடத்தி வருவதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தத் தாக்குதலை நடத்தியதாக அமெரிக்காவின் ராணுவ மையமான பென்டகன் தெரிவித்துள்ளது. பயங்கரவாத மையங்களாகவும், ஆயுதங்களை பதுக்கி வைத்துள்ள இடங்களாகவும் செயல்பட்ட இடங்கள் மீது இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

சிரியாவில் 2 இடங்கள் மற்றும் ஈராக்கில் ஓர் இடத்தின்மீது, அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் உத்தரவுப்படி தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அமெரிக்கா கூறியுள்ளது. தாக்குதலில் உயிரிழந்தவர்கள், காயம் அடைந்தவர்கள் பற்றிய விவரங்கள் ஏதும் வெளியாகவில்லை. கடந்த 5 மாதங்களில், ஈரான் பயங்கரவாத அமைப்புகள் மீது அமெரிக்கா நடத்தும் 2 ஆவது தாக்குதல் இதுவாகும்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்