Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

அமெரிக்காவை விட இந்தியாவில் அதிகம் பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி: நிதி ஆயோக் மருத்துவர்

நிதி ஆயோக்கின் மருத்துவத்துறை உறுப்பினரான மருத்துவர் பௌல், ‘இந்தியா, அமெரிக்காவை விடவும் அதிகம் பேருக்கு கொரோனா முதல் டோஸ் தடுப்பூசி போட்டுள்ளது’ என்ற தகவலை தெரிவித்துள்ளார்.

இதுபற்றி பேசுகையில், “தரவுகளின்படி, இந்தியாவில் ஒரு டோஸ் தடுப்பூசியையாவது பெற்றிருக்கும் நபர்கள், 17.2 கோடியாக உள்ளது. இதன்மூலம், நாம் அமெரிக்காவைவிடவும் அதிகம் பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி அளித்துள்ளோம்” எனக்கூறியுள்ளார்.

image

விரைவில் தடுப்பூசி விநியோகம் இன்னும் கூட அதிகரிக்கப்படும் என உறுதியளித்திருக்கும் அவர், “இந்த இரண்டாவது அலை கொரோனா கொஞ்சம் தனிந்துவிட்டால், நாம் (மக்கள்) அனைவரும் மீண்டுமொரு முறை கடந்த ஜனவரி – பிப்ரவரியில் இருந்தது போல அசால்ட்டாக இருந்துவிடுகிறோம். தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்திலிருந்து விலகிவிடுகிறோம். அப்படியில்லாமல், இந்த கொரோனா அலை தனிவதை, தடுப்பூசி எடுத்துக்கொள்வதற்கான அவகாசம் என நாம் நினைத்து செயல்பட வேண்டும்” எனக்கூறியுள்ளார் அவர்.

image

கொரோனா பாதிப்பு கடந்த சில தினங்களாக குறைந்து வருவது பற்றி மத்திய சுகாதாரத்துறை செயலர் லாவ் அகர்வால் பேசுகையில், “பல மாவட்டங்களில், கொரோனா குறையத்தொடங்கிவிட்டது. 100 பேருக்கு மேல் தினசரி கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்படும் மாவட்டங்கள் குறைந்துவருகின்றன. தரவுகளின்படி, 257 மாவட்டங்களில்தான் 100க்கும் மேற்பட்ட கொரோனா தினசரி தரவுகள் பதிவாகிறது” எனக்கூறியுள்ளார்.

377 மாவட்டங்களில், கொரோனா பரிசோதனை செய்யப்படும் நபர்களில் 5 சதவிகித பேருக்கே தொற்று உறுதியாகும் நிலை இருப்பதாக,மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்