Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

கோவாக்சின் தடுப்பூசி: அவசர கால அனுமதி அளிக்க அமெரிக்கா மறுப்பு

இந்திய நிறுவனமான பாரத் பயோடெக் தயாரித்து வரும் கோவாக்சின் தடுப்பூசிக்கான அவசர கால அனுமதியை மறுத்துள்ளது அமெரிக்கா. கடந்த ஜனவரி மாத மத்தியில் இந்தியாவில் இந்த தடுப்பூசியை பயன்படுத்த இந்திய அரசு அவசர கால அனுமதியை வழங்கி இருந்தது. இந்நிலையில் அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) இந்த மருந்துக்கு அவசர கால அனுமதி வழங்க மறுத்துள்ளது. 

செயலிழக்கப்பட்ட (Inactivated) வைரஸ் பிளாட்பாரமில் உருவாக்கப்படுகிறது கோவாக்சின். இந்த நிலையில் அமெரிக்காவில் இந்த மருந்தை அவசர கால அனுமதிக்காக பயன்படுத்தும் நோக்கில் விண்ணப்பித்திருந்தது பாரத் பயோடெக் நிறுவனத்தின் கூட்டு நிறுவனமான அக்குஜென் (Ocugen). 

இந்த அனுமதியை அந்நிறுவனம் அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்திடம்(FDA) கோரி இருந்தது. அதையடுத்து இந்த மருந்து குறித்த போதுமான தகவல்கள் இல்லை எனக் கூறி அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அனுமதி வழங்க மறுத்துள்ளது. மேலும் கூடுதல் தகவல் மற்றும் தரவுகளை சமர்பிக்குமாறு கோரியுள்ளது FDA.

இந்த மருந்து பாதுக்காப்பான ஒன்று என்பதை நிரூப்பிக்க வேண்டும் என்பதற்கு கூடுதல் தரவுகளை FDA கேட்டுள்ளதாக தெரிகிறது. இது இந்த மருந்தின் செயல்திறன்  குறித்து அறிந்து கொள்வதற்கான சோதனை என தெரிகிறது. 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்