Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

கோவாக்சினை விட கோவிஷீல்டு தடுப்பூசியில் கூடுதல் நோய் எதிர்ப்பு திறன்: ஆய்வில் தகவல்

கோவாக்சினை விட கோவிஷீல்டு தடுப்பூசியில் கூடுதல் நோய் எதிர்ப்பு திறன் உருவாகிறது என முதல் கட்ட ஆய்வில் தெரியவந்திருக்கிறது.

நாடு முழுவதும் தற்போது 23 கோடிக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இரண்டு டோஸ்களை போட்ட பிறகு, கோவிஷீல்டு, கோவாக்சின் இரண்டுமே சிறந்த பலன்களை தருவதாக நிபுணர்கள் தெரிவித்திருக்கின்றனர். இந்நிலையில், கோவிஷீல்டில் கூடுதலான நோய் எதிர்ப்பு தன்மை உருவாகுவதாக முதல் கட்ட ஆய்வில் தெரியவந்திருக்கிறது.

13 மாநிலங்களைச் சேர்ந்த 515 சுகாதாரப் பணியாளர்களிடம் இது தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டது. இவர்களில் 425 பேருக்கு கோவிஷீல்டும், 90 பேருக்கு கோவாக்சினும் செலுத்தப்பட்டது. 2-ஆவது டோஸ் செலுத்தப்பட்ட 21 நாள் முதல் 36 நாட்களுக்குள் சிறப்பான நோய் எதிர்ப்பு திறன் உருவானது கண்டறியப்பட்டது.

கோவிஷீல்டு தடுப்பூசியில் 98 சதவிகிதமும், கோவாக்சின் தடுப்பூசியில் 80 சதவிகிதமும் செரோபாசிடிவிட்டி கண்டறியப்பட்டுள்ளது. இரு தடுப்பூசிகளுமே கொரோனா நோயின் தீவிரத்தை குறைத்திருக்கின்றன. உயிரிழப்பு ஏற்படுவதையும் தடுத்திருக்கின்றன. இந்த ஒப்பீடு என்பது முதல்கட்ட நிலை என்பதால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. எனவே, மருத்துவத்துறையினர் இதனை ஒரு வழிகாட்டலாக எடுத்தக் கொள்ள வேண்டாம் என்று நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்