Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

'மத்திய அரசுதான் காரணம்; தமிழகத்துக்கும் ஆபத்து' - நிலக்கரி தட்டுப்பாடு ஏன்?

உலகிலேயே அதிகம் நிலக்கரி பயன்படுத்தும் நாடுகளின் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. சீனாவில் இதே போன்று நிலக்கரி தட்டுப்பாடு பிரச்னை ஏற்பட்டபோது, அங்கு பல தொழிற்சாலைகள் மூடப்பட்டு பாதிப்பு கடுமையாக இருந்தது. அதேபோல இந்தியாவையையும் மின் நெருக்கடி பிரச்னை மிரட்டி வருகிறது. அதற்கான காரணங்கள் குறித்து பார்ப்போம்.

''நிலக்கரி தட்டுப்பாடு குறித்து மக்களிடம் தேவையற்ற அச்சம் பரப்பப்படுகிறது. இதுபோன்ற வதந்திகள் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அடுத்த 4 நாட்களுக்கு தேவையான நிலக்கரி கையிருப்பில் உள்ளது'' என்று மத்திய மின்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் தெரிவித்துள்ளார். ''கொரோனா 2-ம் அலையின்போதும் கூட ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை என்று தான் கடைசிவரை மத்திய அரசு கூறிவந்தது. ஆனால் என்ன நடந்தது'' என டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கடுமையாக சாடியுள்ளார்.

இந்தியாவில் நிலக்கரி இறக்குமதி 4% குறைந்தது- Dinamani

தமிழக மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, 'நிலக்கரி தட்டுப்பாட்டால் தமிழகத்திற்கு பாதிப்பில்லை' என்று கூறியிருக்கிறார். ஆனால், தங்கள் மாநிலங்களில் உள்ள மின்னுற்பத்தி நிலையங்களுக்கு போதிய நிலக்கரியை தருமாறு பிரதமருக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி, ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஆகியோர் கடிதம் எழுதியுள்ளனர். மின்சார தட்டுப்பாடு அபாயம் உள்ளதால் அதை டெல்லி மக்கள் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்றும் அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவுறுத்தியுள்ளார். இன்னும் ஆறு மாதங்களுக்கு இதுபோன்ற சிக்கலான நிலையே நீடிக்கும் என்றும் கூறப்படுகிறது.

Junior Vikatan - 01 September 2021 - நிலக்கரி முறைகேடு... கரியாகிப்போன ரூ.7,906 கோடி! | special story about granite scam

என்ன பிரச்னை?

நாட்டின் மொத்த மின் உற்பத்தி 388 கிகா வாட். இதில் 208.8 கிகா வாட் அதாவது 54 சதவீத மின்சாரம் அனல் மின் நிலையங்கள் மூலமே கிடைக்கிறது. அப்படிப்பார்த்தால், அனல் மின் நிலையங்கள் தான் இந்தியாவின் மின்சாரத்திற்கு பெருமளவில் ஆதாரங்களாக உள்ளன. எப்போதும் 14 நாட்களுக்கான நிலக்கரி கையிருப்பில் இருக்கும். ஆனால் தற்போது, மின் உற்பத்தி நிலையத்தின் நிலக்கரி கையிருப்பு சுமார் 72 லட்சம் டன்கள். இது 4 நாட்களுக்கு போதுமானது. தீடீரென ஏற்பட்டுள்ள இந்த பற்றாக்குறைக்கு மழையும் ஒரு காரணமாக கூறப்படுகிறது. நாட்டில் அதிக அளவில் கனமழை பெய்ததன் காரணமாகவே நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டதாக மத்திய நிலக்கரி துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி விளக்கம் அளித்துள்ளார்.

இந்தாண்டு தொடக்கம் முதல் பெய்த மழையால் நிலக்கரிச் சுரங்கங்களில் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. திடீரென அதிகரித்த மின் தேவை, நிலக்கரி சுரங்கம் இருக்கும் இடங்களில் பெய்யும் கனமழை ஆகியவை நிலக்கரி தட்டுப்பாடுக்கு காரணங்களாக முன்வைக்கப்படுகின்றன. அதேபோல, நிலக்கரியின் விலை சர்வதேச அளவில் உயர்ந்துள்ளதால் இறக்குமதி செய்வதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் மின்தடைக்கான அபாயங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. பொருளாதாரத்தை மீட்டெடுக்க முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தேவைப்படும் மின்சாரம், நிலக்கரி சுரங்கப் பகுதிகளில் பெய்த கனமழை, இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியின் விலை அதிகரிப்பு ஆகியவை மின் உற்பத்தி நிலையங்களில் நிலக்கரி இருப்பு குறைந்தற்கான காரணங்களாக மத்திய அரசு தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நிலக்கரி சுரங்கங்கள்: ஏலம் எடுக்க நிறுவனங்கள் இடையே கடும் போட்டி | Coal Mine Auction - hindutamil.in

நிலக்கரி பற்றாக்குறையால் வட மாநிலங்கள் மின்தடையை சந்தித்து வருகின்றன. பஞ்சாப் மாநிலத்தில் போதுமான நிலக்கரி கையிருப்பில் இல்லாத காரணத்தால், அங்கு பல பகுதிகளில் சுழற்சி முறையில் மின் தடை அமல்படுத்தப்படுகிறது. அதேபோல மின்சார ஆலைகளில் அடுத்த ஐந்து நாள்களுக்கு மட்டுமே நிலக்கரி இருப்பில் உள்ளதாகவும் பஞ்சாப் மாநில மின்சார கார்ப்பரேஷன் லிமிடெட் தெரிவித்துள்ளது. பீகார், ராஜஸ்தான், ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் மின்வெட்டு பிரச்னை தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இது தொடர்பாக சிஐடியூ மாநிலத்துணைத்தலைவர் கே.விஜயனிடம் பேசினோம், ''நிலக்கரி தட்டுப்பாடு என்பது இந்தியா முழுவதும் ஏற்பட்டுள்ள பிரச்னைதான். 3.80 லட்சம் மெகாவாட்டில் 53 சதவீதம் நிலக்கரியில் இயங்கும் அனல்மின் நிலையங்கள் தான் இருக்கிறது. இதற்கான நிலக்கரி பற்றாக்குறை என்பது ஒருமாதமாக இருந்துகொண்டுதான் இருக்கிறது. எல்லா சுரங்களிலும் இருப்பு இருப்பதாக மத்திய அரசு கூறிவந்தது. ஆனால், தற்போது 4 அல்லது 5 நாள் மட்டுமே இருப்பு உள்ளதாக அரசு கூறுகிறது. டெல்லி, பஞ்சாப், மகாராஷ்டிரா, தெலங்கானா, ஆந்திராவில் மின்தட்டுப்பாடு ஏற்படும் எனக் கூறப்படுகிறது. இதில் தமிழ்நாடு சற்று தப்பித்திருக்கிறது. ஆனால், தமிழகத்திலும் இந்த நிலை ஏற்படும் வாய்ப்புகள் இருக்கிறது. இதற்கு முற்றிலும் மத்திய அரசின் நடவடிக்கைகள் தான் காரணம்.

வீடுகளில் மின் கட்டணம் அதிகரிக்க காரணம் என்ன? விளக்கம் இதோ! | How TANGEDCO calculating your electricity consumption charge? Explainer

ஏனென்றால், 2014ம் ஆண்டு ஆட்சிக்கு வரும்போது, 40 கோடி டன் உற்பத்தியாகிக்கொண்டிருந்த நிலக்கரியை 100கோடி டன் உற்பத்தியாக உயர்த்தி காட்டுவோம் என கூறியிருந்தார்கள். தற்போது 66 கோடி டன் நிலக்கரி உற்பத்தியாகிறது. 8 வருடத்தில் உற்பத்தி கூடுதலாகியிருக்கிறதே தவிர, அவர்கள் கூறியபடி 100 கோடி வரவில்லை. அதேபோல புதுப்பிக்கத்தக்க மின்சாரத்துக்கு மாறப்போகிறோம் என்று மத்திய அரசு கூறியது. 2022க்குள் 1.45 லட்சம் மெகாவாட் மின்சாரத்தை கொண்டுவந்துவிடுவோம் என கூறிவிட்டு இதில் எதிலுமே கவனம் செலுத்தாமல் இருந்ததும் தற்போதைய நிலைக்கு காரணம். அதேபோல அண்மையில் சுரங்க சட்டங்கள் மாற்றியமைக்கப்பட்டபின், யார் வேண்டுமானாலும் நிலக்கரி சுரங்கங்களை ஏலத்திற்கு எடுக்கலாம் என்ற நிலையை உருவாக்கிவிட்டார்கள். இதற்கு முன்னால் இருந்த லிங்கேஜ் மைல்ஸ்களை ரத்து செய்து, யார் வேண்டுமானாலும் நிலக்கரி சுரங்கங்களை எடுத்துக்கலாம் என்று கூறியதால் தனியார் நிறுவனங்கள் புகுந்துவிட்டனர்.

இதற்கு முன்னாலும் மழைக்காலங்கள் இருந்ததுண்டு. அப்போதெல்லாம் மழையின் காரணமாக நிலக்கரி சுரங்கங்களிலிருந்து நிலக்கரி வராமல் இருந்த நிலை இல்லை என்பதை நாம் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். தனியார் கைவசம் சென்றதால், அவர்கள் செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்கி வருவது பலரும் அறிந்ததே.

அனல்மின் நிலையங்களுக்கு தேவையான நிலக்கரி உற்பத்தி என்பது, மகாராஷ்டிராவை ஒட்டிய பகுதிகள், ஜார்க்கண்ட், ஒரிசா, சத்தீஸ்கரில் நிலக்கரி போதுமான அளவில் வெட்டி எடுக்கப்படுகிறது. மத்திய அமைச்சர்கள் நிலக்கரி இருப்பதாக கூறினாலும், மாநிலங்களில் உண்மை நிலை அப்படியில்லை.

இலங்கையில் மின்வெட்டு தொடர்பில் மின்சாரத்துறை அமைச்சு வெளியிட்ட நிம்மதி தரும் செய்தி..!!

தமிழ்நாட்டுக்கு இதனால் பாதிப்பு ஏற்படுமா?

தமிழ்நாட்டை இந்த தட்டுப்பாடு பாதிக்கும். ஏனென்றால், நமக்கு பெருமளவில் கொல்கத்தாவின் ஹல்தியா துறைமுகத்திலிருந்தும், ஒரிசா, சத்தீஸ்கரிலிருந்தும் நிலக்கரி வருகிறது. ஒரிசாவில் மழை பெய்தது உண்மை. அதை மறுப்பதிற்கில்லை. ஆனாலும், நம்மிடம் இருப்பது திறந்த வெளி சுரங்கங்கள் தான். சுரங்கபாதையில் இருக்கும் சுரங்கங்கள் அல்ல. திறந்த வெளி சுரங்களில் 100அடியில் நிலக்கரியை சேகரிக்க முடியும். அப்படி சுரங்களில் தண்ணீர் இருந்தால் அதை வெளியேற்ற முடியும்.

தமிழகத்திற்கு ரயில், கப்பல்களிலிருந்து மேற்கண்ட மாநிலங்களிலிருந்து நிலக்கரி வருகிறது. இதில் வேகன் ஒதுக்கீடு பிரச்னையால் நமக்குத்தான் பாதிப்பு. ஒருநாளைக்கு 8 அல்லது 9 வேகன் ஒதுக்கீடு செய்யும்நிலையில், அதன் கொள்ளளவு 3400 டன் இருக்கும். அப்படியிருக்கும்போது 7, 8 ரேக் ஒதுக்கீட்டில் ஏராளமான கோளாறுகள் இருக்கிறது. அவர்கள் நினைத்தால் தான் நிலக்கரி வரும். இல்லை என்றால் நிச்சயம் பாதிப்பு ஏற்படும். இருந்தாலும், தமிழகம் இருப்பு இருக்க காரணம் நாம் தனியாரிடமிருந்து மின்சாரத்தை வாங்கிக்கொண்டிருக்கிறோம். அதனால் நம்மிடம் தற்போது இருப்பு இருக்கிறது'' என்றார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்