Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதேபோல், தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அறிவிப்பின்பேரில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் சென்னை கீழ்ப்பாக்கம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் பாஜக ஆட்சியில் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்திருப்பதாகவும், கொரோனா பேரிடர் காலத்தில் எரிபொருள் விலை உயர்வு சாமானியரை கடுமையாக பாதிக்கும் எனவும் காங்கிரஸ் கட்சியினர் குற்றச்சாட்டியுள்ளனர். எரிபொருள் விலை உயர்ந்தால் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களின் விலை அதிகரிக்கும் அபாயம் உள்ளது. கலால் வரி மூலம் ரூ.20 லட்சம் கோடி வருவாய் கிடைத்தும் பாஜக அரசு சுமையை ஏற்றுகிறது என்றும் காங்கிரஸ் குற்றம் சாட்டினர்.

இதனிடையே, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 97 ரூபாயை தாண்டியுள்ளது. கடந்த சில தினங்களாக பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வருகிறது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல், 25 காசுகள் அதிகரித்து, 97 ரூபாய் 19 காசுகளுக்கு விற்பனையாகிறது. டீசல் ஒரு லிட்டருக்கு 27 காசுகள் உயர்ந்து, 91 ரூபாய் 42 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல் விலை நாட்டின் சில பகுதிகளில் ஏற்கெனவே 100 ரூபாயை தாண்டிவிட்ட நிலையில் தமிழகத்திலும் அந்நிலையை எட்ட இருப்பது வாகன ஓட்டிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்