Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

WTC Finals: இந்தியா Vs நியூசிலாந்து முதல் நாளில் ஆட்டம் காட்ட காத்திருக்கும் மழை

இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நடைபெறும் சவுத்தாம்டன் நகரில் மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் கோலி தலைமையிலான இந்திய அணியும், வில்லியம்சன் தலைமயிலான நியூசிலாந்து அணியும் இன்று களம் காண்கிறது. முதல் முறையாக ஐசிசி நடத்தும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் என்பதால் இதனை கிரிக்கெட் ரசிகர்களை அனைவரும் எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர். ஆனால் முதல் நாள் ஆட்டம் மழையால் தடைப்படும் சூழல் உருவாகியிருக்கிறது. சவுத்தாம்டனில் கடந்த சில நாள்களாக நல்ல வெயில் காய்ந்த சூழலில் அடுத்த 5 நாள்களுக்கு மழை இருக்கும் என அந்நாட்டு வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.

image

அதற்கு ஏற்றார்போல சவுத்தாம்டன் நகரில் இன்று காலை 6 மணி முதல் சனிக்கிழமை காலை 6 மணி வரை கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் போட்டி நடைபெறும் சவுத்தாம்டன் நகரின் சில பகுதிகளில் 40 மில்லி மீட்டர் மழை பதிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சனிக்கிழமையில் இருந்து மழை படிப்படியாக குறையும் என்று இங்கிலாந்து வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.

மேலும் போட்டி நடைபெறும் முதல் நாளான இன்று மழைக்கு 80 சதவித வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் இந்தியா - நியூசிலாந்து அணிகள் டாஸ் போடும் நிகழ்வு நடக்குமா? போட்டி குறிப்பிட்ட நேரத்தில் தொடங்குமா? என்று பல்வேறு கேள்விகளுடன் காத்திருக்கிறார்கள் கிரிக்கெட் ரசிகர்கள்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்