Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

ஜூலை 11ஆம் தேதி வங்கக்கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்தம்: தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு

வங்கக்கடலில் நாளை மறூநாள் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது.

மத்திய மேற்கு - வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதி, தெற்கு ஒடிசா - வடக்கு ஆந்திர பகுதிகளில் உருவாகும் தாழ்வுப் பகுதியால் தமிழகத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வுமையம் தெரிவித்திருக்கிறது. இந்த காற்றழுத்தம் புயலாக மாறும் வாய்ப்புகள் இருக்கிறதா மற்றும் எந்த திசையை நோக்கி நகரும் என்பது குறித்த விவரங்கள் அளிக்கப்படவில்லை.

இதனால் தெலங்கானா, ஆந்திரா மற்றும் தமிழகத்தில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும் வாய்ப்புகள் இருப்பதாக வானிலை மையம் தெரிவித்திருக்கிறது. அதேபோல் தென்மேற்கு மற்றும் அரபிக்கடல் பகுதிகளிலும் 40-50 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 11,12ஆம் தேதிகளில் ஆந்திரா மற்றும் தமிழகத்தில் சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்பிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்