Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

ஊழியரை பணி நீக்கம் செய்த வால்மார்ட்: 125 மில்லியன் டாலர்களை செலுத்த நீதிமன்றம் உத்தரவு

அமெரிக்க பன்னாட்டு நிறுவனமான ‘வால்மார்ட்’ பதினாறு ஆண்டுகள் பணி செய்த பெண் ஊழியரை பணி நீக்கம்  செய்தமைக்காக 125 மில்லியன் அமெரிக்க டாலர்களை செலுத்த வேண்டும் என அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டவுன் சிண்ட்ரோம் நோயினால் பாதிக்கப்பட்ட அவரை மார்லோ ஸ்பேத் என்ற பெண் ஊழியரை நீக்கியுள்ளது வால்மார்ட். 

அந்த பெண் ஊழியரின் பணி நேர ஷிப்டில் சில மாறுதல்களை செய்துள்ளது வால்மார்ட். ஆனால் அவரது நோய் காரணமாக அந்த ஷிப்டில் பணி செய்ய முடியாது என அவர் சொல்ல பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அதையடுத்து அனைவருக்கும் சமமான வேலைவாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கும் ஆணையத்தின் மூலம் தற்போது அவருக்கு வால்மார்ட் 125 மில்லியன் அமெரிக்க டாலர்களை செலுத்த வேண்டி உள்ளது. 

ஊழியர் நலன் சார்ந்த சட்ட ரீதியாக இந்த நடவடிக்கையை நீதிமன்றம் எடுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்