இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளது.
கொழும்புவில் இருக்கும் பிரேமதாசா மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக நடைபெறும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனகா பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளார். இந்திய கேப்டன் ஷிகர் தவானுடன் பிருத்வி ஷா தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கவுள்ளார். இந்திய அணிக்காக முதல் ஒருநாள் போட்டியில் இஷான் கிஷனும், சூர்யகுமார் யாதவும் புதிதாக களம் காண்கின்றனர்.
இந்திய அணி: ஷிகர் தவான், பிருத்வி ஷா, இஷான் கிஷன், மணிஷ் பாண்டே, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, குருணால் பாண்ட்யா, புவனேஷ்வர் குமார், தீபக் சஹார், குல்தீப் யாதவ், சஹால்
இலங்கை அணி: அவிஷ்கா பெர்ணான்டோ, மினோத் பனுகா, பனுகா ராஜபக்சா, தனஞ்சயா டி சில்வா, சரித் அசலான்கா, தசுன் ஷனகா, ஹசரங்கா, உதானா, சண்டகன், துஷ்மந்தா சமீரா, சமிகா கருணாரத்னே
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்