டோக்கியோ ஒலிம்பிக்கில் மகளிர் ஹாக்கிப் போட்டியில் இந்திய மகளிர் அணி 1-0 என்ற கோல் கணக்கில் அயர்லாந்தை வீழ்த்தியது.
ஒலிம்பிக் ஹாக்கில் மகளிர் லீக் போட்டியில் இன்று இந்தியா - அயர்லாந்து அணிகள் மோதின. இந்தியா மகளிர் ஹாக்கி அணி தங்களுடைய முந்தைய 2 லீக் போட்டிகளில் தோல்வியடைந்த நிலையில் இன்று வெற்றிப்பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் அயர்லாந்தை எதிர்கொண்டது. ஆட்டத்தில் முதல் போட்டியில் இரண்டு அணிகளும் கோல் ஏதும் அடிக்கவில்லை.
இந்தியாவுக்கு அதிகமான பென்லாட்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தும் அவர்களால் கோலடிக்க முடியவில்லை. இதனையடுத்து இரண்டாவது பாதியில் கடைசி சில நிமிஷங்களுக்கு முன்பாக இந்திய கேப்டன் ராணி ராம்பாலின் பாஸை லாவகமாக வாங்கிய நவ்நீத் அதனை கோலாக மாற்றி அசத்தினார். இதனையடுத்து அயர்லாந்தை 1-0 என்ற கணக்கில் இந்தியா வெற்றிப்பெற்றது.
இந்திய மகளிர் ஹாக்கி அணி 1980 ஆண்டு முதல் ஒலிம்பிக்கில் விளையாடி வருகிறது. 1980 முதல் இந்திய மகளிர் அணிக்கு இதுதான் முதல் வெற்றி ஆகும்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்