Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

”2026 தேர்தலில் 150 பாஜக எம்எல்ஏக்கள் சட்டமன்றத்துக்குள் நுழைவார்கள்” - அண்ணாமலை நம்பிக்கை

“2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் பாஜகவை சேர்ந்த 150 எம்எல்ஏக்கள் சட்டமன்றத்துக்குள் நுழைவார்கள்” என்று அக்கட்சியின் தமிழக தலைவராக பொறுப்பேற்க உள்ள அண்ணாமலை, ஈரோட்டில் தொண்டர்கள் மத்தியில் இன்று பேசினார்.

பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவராக பொறுப்பேற்க உள்ள அண்ணாமலை ஈரோடு குமலன்குட்டை பகுதிக்கு இன்று சென்றிருந்தார். அங்கு பாஜக சார்பில் அவருக்கு உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. அப்போது, “மக்களுக்கு சேவை செய்வதற்காகவே கட்சியில் எனக்கு பதவி வழங்கப்பட்டது” எனக்கூறினார் அவர்.

Annamalai appointed Tamil Nadu BJP State president - The Hindu

இதனையடுத்து தொண்டர்கள் மத்தியில் பேசிய அவர், “பாரதிய ஜனதா கட்சியை பொருத்தவரை சட்டமன்றத்திற்குள் நுழைவுதான் சிரமம். தற்போது 4 சட்டமன்ற உறுப்பினர்கள் இருப்பதால், வருங்காலமென்பது தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியின் காலமாக அமையும். ஈரோட்டில் விவசாயிகள், கட்சியின் கொள்கையை புரிந்து கொள்ளக்கூடியவர்கள் அதிகளவு இருப்பதால் கட்சியின் மிகப்பெரிய வளர்ச்சி இங்கு இருக்கும்.

என்னுடைய முதல் வேலை அனைவரையும் ஒன்றிணைத்து ஒரு குழுவாக செயல்படுவதுதான். அப்படி செயல்பட்டு பாஜகவை எடுத்துச்சென்றால் மட்டுமே, பாஜகவை ஆட்சியில் அமரவைக்கமுடியும். ஒவ்வொரு நல்ல வேட்பாளரும் நம் கட்சியில் சேரும்போது வெற்றி நிச்சயம். அதேபோல தமிழகத்தில் உள்ள கிராமங்களில் பாரதிய ஜனதா கட்சியை கொண்டு சென்றால் வெற்றி நிச்சயம். தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு நிச்சயம் வரவேண்டும்” என்றார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்