Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

ஜூலை 22 முதல் நாடாளுமன்றம் அருகே விவசாயிகள் போராட்டம்: ராகேஷ் டிக்கைட்

ஜூலை 22-ஆம் தேதி முதல் 200 பேர் நாடாளுமன்றத்திற்கு அருகே போராட்டம் நடத்துவார்கள் என பாரதிய கிசான் யூனியன்  தலைவர் ராகேஷ் டிக்கைட் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக பேசிய ராகேஷ் டிக்கைட், “ எந்த நிபந்தனையும் இல்லாமல் விவசாய சட்டங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு விரும்பினால், நாங்கள் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறோம்இதுதான் பலனளிக்கும் தீர்வைத் தரும், இல்லையென்றால் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்துவார்கள் "என்று கூறினார்.

மத்திய அரசு கொண்டுவந்த மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக நவம்பர் 26ஆம் தேதி முதல் டெல்லி எல்லைகளை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அதன்பின்னர் விவசாயிகளுக்கும், அரசுக்கும் இடையே பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடந்தன. ஆனால், ஜனவரி 26 அன்று நடந்த விவசாயிகளின் பாராளுமன்ற முற்றுகைகளுக்கு பின்னர் பேச்சுவார்த்தை நின்றுபோனது.

இந்தச் சூழலில்தான் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என்று ராகேஷ் டிக்கைட் கோரிக்கை வைத்திருக்கிறார். தொடர்ந்து பேசிய அவர்,"எங்கள் கோரிக்கைகளை அவர்கள் கேட்கும் வரை நாங்கள் தொடர்ந்து நாடாளுமன்றத்திற்கு வெளியே போராட்டம் நடத்துவோம்" என்று கூறினார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்