Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

நீலகிரி: 2 வருடங்களுக்கு மேலாக காயங்களுடன் சுற்றி வந்த காட்டு யானை உயிரிழப்பு

நீலகிரி மாவட்டம் கூடலூரில் கடந்த 2 வருடங்களுக்கு மேலாக உடலில் காயங்களுடன் சுற்றிவந்த காட்டு யானை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. 

நீலகிரி மாவட்டம் கூடலூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக உடலில் காயங்களுடன் சுற்றி திரிந்தது சுமார் 20 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை. பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று கடந்த மாதம் 17ஆம் தேதி சிகிச்சை அளிப்பதற்காக யானையை வனத்துறையினர் பிடித்தனர். பிடிக்கப்பட்ட யானை முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள அபயாரண்யம் வளர்ப்பு யானைகள் முகாமில், மரக் கூண்டில் அடைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

வனத்துறையினர் அளித்த தொடர் சிகிச்சை காரணமாக யானை உடலில் பின்பக்கம் இருந்த காயம் வேகமாக குணமடைந்து வந்தது. இருப்பினும் யானையின் காலில் இருந்த வீக்கம் குறையவில்லை. வனத்துறையினர் யானைக்கு தொடர் சிகிச்சையை அளித்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று காலை சிகிச்சையில் இருந்த காட்டு யானையின் உடல்நிலை திடீரென மோசமடைந்தது. வயிற்றுப் போக்கால் பாதிக்கப்பட்டு யானை உணவு எடுத்துக் கொள்ளவில்லை. காலை முதல் வனத்துறையினர் யானைக்கு தொடர் சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் இரவு 7.30 மணி அளவில் யானை பரிதாபமாக உயிரிழந்தது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்