டோக்கியோ ஒலிம்பிக்கில் 3000 மீட்டர் ஆடவர் தடைதாண்டுதல் (Steeplechase) ஓட்டத்தில் இந்தியாவின் அவினாஷ் சேபிள் 7 ஆம் இடம் பிடித்து இறுதிப் போட்டிக்குள் நுழையும் வாய்ப்பை நழுவவிட்டார்.
டோக்கியோ ஒலிம்பிக் கடந்த 23 ஆம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இதில் ரசிகர்களின் அதிக எதிர்பார்ப்புக்குரிய போட்டிகளில் ஒன்றான தடகளம் இன்று தொடங்கி இருக்கிறது. தடகளத்தில் பல்வேறு பிரிவு ஓட்டப்பந்தயம், நடைபந்தயம், மாரத்தான், வட்டு எறிதல், குண்டு எறிதல், சங்கிலி குண்டு எறிதல், ஈட்டி எறிதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், டிரிப் ஜம்ப், கம்பூன்றி தாண்டுதல், டெகத்லான், ஹெப்டத்லான் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு மொத்தம் 48 தங்கப்பதக்கம் வழங்கப்படுகிறது.
அதன்படி இன்று ஆடவருக்கான 3000 மீட்டர் தடைதாண்டுதல் ஓட்டப்பந்தயத்துக்கான தகுதிச் சுற்று நடைபெற்றது. இதில் இந்தியாவின் அவினாஷ் சேபிள் பங்கற்றார். பந்தய தூரமான 3000 மீட்டரை 8:18 நிமிஷம் 12 விநாடிகளில் கடந்த அவர் 7 ஆம் இடத்தை மட்டுமே பிடித்தார். இதனால் இறுதிப் போட்டிக்கு அவர் தகுதிப்பெறவில்லை. ஆனால் 3000 மீட்டரை விரைவாக கடந்த தேசிய சாதனையை நிகழ்த்தியுள்ளார் அவினாஷ் சேபிள்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்