Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

தனியார் பள்ளிகள் கட்டண விவகாரம்: உயர்நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு

நடப்புக் கல்வியாண்டில் தனியார் பள்ளிகளின் கட்டணம் குறித்து இன்று உத்தரவு பிறப்பிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
 
பொதுமுடக்கம் காரணமாக கல்விக் கட்டணம் வசூலிக்க தனியார் பள்ளிகளுக்கு தமிழ்நாடு அரசு கடந்த ஆண்டு தடை விதித்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம், 75 சதவீத கட்டணத்தை இரு தவணைகளாக வசூலித்துக் கொள்ள அனுமதியளித்தது. இந்த வழக்குகள் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, 85 சதவீத கட்டணத்தை வசூலிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும், கட்டணம் செலுத்தாத மாணவர்கள் பள்ளிகளில் இருந்து நீக்கப்பட மாட்டார்கள் எனவும், தனியார் பள்ளிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கட்டண சலுகை கோரினால் பரிசீலிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
 
image
தமிழ்நாடு அரசு தரப்பில், கடந்த கல்வியாண்டில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தில் 75 சதவிகிதத்தை நடப்பு கல்வியாண்டிலும் வசூலிக்க அனுமதியளித்து, ஜூலை 5 ஆம் தேதி சுற்றறிக்கை பிறப்பித்திருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டது. ராஜஸ்தான் மாநில பள்ளிகள் வழக்கில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு தமிழ்நாட்டுக்குப் பொருந்தாது என்றும் வாதிடப்பட்டது. இதைத் தொடர்ந்து தனியார் பள்ளிகள் கட்டணம் தொடர்பாக இன்று உத்தரவு பிறப்பிக்கப்படுமென சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்