கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்த வண்ணம் இருப்பதை அடுத்து, நோய் பரவலை கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசு 6 பேர் கொண்ட குழுவை அனுப்பி வைத்துள்ளது.
கேரளாவில் நாள்தோறும் 22 ஆயிரத்துக்கும் அதிகமானவர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்படுகிறது. இந்தியாவில் பதிவாகும் தினசரி கொரோனா பாதிப்பில் 50 விழுக்காடு பாதிப்பு கேரளாவில் பதிவானதாக மத்திய அரசு தெரிவிக்கிறது. எனவே நோய்ப்பரவலை கட்டுப்படுத்த மாநில அரசு வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது.
இந்த சூழலில் கேரளாவில் கொரோனா பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வர மாநில அரசுக்கு உதவும் வகையில் தேசிய நோய் தடுப்பு மையத்தில் இருந்து 6 பேர் கொண்ட குழுவை மத்திய அரசு அனுப்பி வைத்துள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் மண்சுக் மாண்ட்வியா தெரிவித்துள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்