வரதட்சணை கொடுமைகளில் ஈடுபட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் எச்சரித்துள்ளார்.
கேரளாவில் அண்மைக்காலமாக வரதட்சணை கொடுமைகள் அதிகரித்து வருவது குறித்து சட்டமன்றத்தில் உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, வரதட்சணை வழக்குகளில் கடும் தண்டனைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பினராயி விஜயன் தெரிவித்தார்.
ஆயுர்வேத மருத்துவ மாணவி விஸ்மயா உயிரிழப்புக்கு பிறகு கேரளாவில் வரதட்சணை முறைக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. வரதட்சணை கொடுமை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த கேரள ஆளுநர் ஆரிஃப்முகமது கான் உண்ணாவிரதம் இருந்தது குறிப்பிடத்தக்கது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்