Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

முதுபெரும் தலைவர் என்.சங்கரய்யாவுக்கு 'தகைசால் தமிழர்' விருது

தமிழக அரசின் 'தகைசால் தமிழர்' விருதுக்கு முதுபெரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் என்.சங்கரய்யா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாட்டிற்கும், தமிழின வளர்ச்சிக்கும் பங்காற்றியவர்களை பெருமைப்படுத்த ’தகைசால் தமிழர்’ என்ற பெயரில் புதிய விருதை உருவாக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். விருதுடன் 10 லட்சம் ரூபாய்க்கான காசோலை மற்றும் பாராட்டுச்சான்று ஆகியவற்றை சுந்திர தின விழாவில் முதல்வர் வழங்குவார் என்றும் அரசு தெரிவித்திருந்தது.

இந்த விருதுக்கு  முதுபெரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் என்.சங்கரய்யா தேர்வு செய்யப்பட்டுள்ளார். பொதுவுடைமை இயக்கத் தலைவரான என்.சங்கரய்யா அண்மையில் தனது நூறாவது பிறந்தநாளை கொண்டாடினார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உருவானபோது இருந்த 36 தலைவர்களில் என்.சங்கரய்யாவும் ஒருவர். 1957,1962ஆம் நடைபெற்ற இந்திய தேர்தல்களில் இவர் மதுரைக் கிழக்குத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிவாய்ப்பை இழந்திருந்தாலும், 1967ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் மதுரை மேற்குத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். 1982 - 1991வரை விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவராக பதவிவகித்தார்.

1995ஆம் ஆண்டு கடலூரில் நடைபெற்ற மார்க்ஸ்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டில் கட்சியின் மாநில செயலாளராக தேர்வுசெய்யப்பட்ட இவர், 2002ஆம் ஆண்டு பிப்ரவரி வரை அந்தப் பொறுப்பை வகித்தார். விடுதலைப் போராட்ட வீரரும் முதுபெரும் தலைவருமான என். சங்கரய்யாவுக்கு சுந்திர தின விழாவில் தகைசால் தமிழர் விருதை வழங்கி கவுரவிக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்