Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

யூரோ கால்பந்து தொடர்: கால் இறுதியில் இங்கிலாந்து - உக்ரைன் இன்று மோதல்

யூரோ கால்பந்து தொடரில் இன்றுநள்ளிரவு 12.30 மணிக்கு இத்தாலியின் ரோம் நகரில் நடைபெறும் ஆட்டத்தில் இங்கிலாந்து - உக்ரைன் அணிகள் மோதுகின்றன.

இங்கிலாந்து அணியானது உலகத் தரவரிசையில் 3-வதுஇடத்தில் உள்ளது. அதேவேளையில் உக்ரைன் அணி 24-வது இடம் வகிக்கிறது. லீக் சுற்றில் இங்கிலாந்து அணி தோல்வியை சந்திக்காமல் தனது பிரிவில் முதலிடம் பிடித்திருந்தது. மேலும் நாக்-அவுட் சுற்றில் பலம் வாய்ந்த ஜெர்மனியை பந்தாடியிருந்தது. அதேவேளையில் உக்ரைன் அணி லீக் சுற்றில் இரு ஆட்டங்களில் தோல்வி கண்டு தனது பிரிவில் 3-வது இடத்தையே பிடித்திருந்தது. நாக்-அவுட் சுற்றில் சுவீடன் அணியை தோற்கடித்திருந்தது. இந்தத் தொடரில் வெறும் 3 புள்ளிகளை மட்டுமே பெற்று நாக்-அவுட் சுற்றில் விளையாடிய ஒரே அணி உக்ரைன் மட்டுமே.


கருத்துரையிடுக

0 கருத்துகள்